காலத்தின் பிடியில் இன்று  காரணமின்றி என்னில் ஓலத்தின் துளியதையே ஒன்றாயிங்கு  காணுறேன்..
 

ஞாலத்தின் பாலத்தில்  நான் நடந்த கணங்களிலே மன கோலத்தில் மெய்யன்பும் குற்றுயிர்தான் சொல்லுகிறேன் ..
 

சாத்திரத்தின் சருகுகள் என் ஆத்திரத்தின் அமைவுக்கு ஆணியொன்றாய்  ஊன்றியதை  ஆறாமல் உணருகிறேன்..
 

மன பாத்திரத்தின் நடத்தையில் பொய்த்தரித்திரங்கள்  தறைவினால் வேண்டாமிந்த வாழ்வென்று வெறுத்துத்தான்  கூறுறேன்...

 


சிக்கிய துன்பத்தில் சிதறாமல் இருந்தவென்னை நித்திய வேதனைக்கு நிறுத்தாமல் நடத்துவோரும்,
 

மக்கிய இன்பத்தை மறைவாயே காட்டிஎன்னில் நக்கிய தேன்போலே நா நனைய 
வைப்போரும்,
 

சத்திய வாழ்விலேன்னை சரம் தொடுத்த சிலபேரை சாத்திய கேள்விகளால் தரம் காண வைத்தோரும்,
 

அவர்புத்தியே மழுங்கியினி புதுவாழ்வில் சறுக்கினாலோ   நித்தமும் எனக்குமினி   நெகிள்வாயே இருக்கும் தானே  ..

 


நாளையின் காலத்தில் எனை அணுகும் மனஆலத்தில் சோகமும் சோதனையும் சொல்லாமல் போகட்டும்..
 

மரித்த என் காலத்தில் மறைந்திருந்த வேதனைகள் என் சிரித்த தவப்பொழுதினிலே சிதறித்தான் 
சாகட்டும்..
 

வெறித்தபேய்  வெருட்டல்கள், வேண்டாத வம்புகள் ,அவை தரித்திருந்த ஆட்களுடன்   தரம் கெட்டு வீழட்டும்..
 

களைத்த என்கவியில் கரைச்சல்கள் இருப்பதனால் திகைத்த வாசகர்கள் கலங்காமல் இருக்கட்டும்..
 

அணைத்த அன்பொன்றால் எனக்களித்த நனிப்பொளுதில் நிலைத்த ஆனந்தம் நெடும்காலம் வாழட்டும்... 

 


மனமென்னும் மாயமதில் உன் சாயம் கலக்குதடி..

மரித்திருந்தருந்த செல்களெல்லாம் மறுவுயிரை எடுக்குதடி..

என் நினைவெல்லாம் உன்னோடு உல்லாசம் போகுதடி..

உளறவில்லை நானுமிதை உள் நெஞ்சம் சொல்லுதடி..

 என் உயிர் பிரிந்து உன்னோடு ஒன்றிப்பாய் சேருதடி..

உன்னால் தான் உடலின்கு உருக்குலைந்து போகுதடி..

என் நிழல்கூட என்னையின்று தொடராமல்  போகுதடி..

உன் பயண  இடமெல்லாம் என் நிழல் தேடி  தொடருதடி..

காலையிலும் மாலையிலும் காத்திருந்த கணத்திலடி..

சோலைஇளம் குருவிபோல மனம் சோதனையை இசைக்குதடி..

நீண்டகால கனவெல்லாம்  நனவாக போகுமாடி??..

நீ வந்து என்னோடு நீங்காமல் போனாலடி....


சங்கடத்தில் சங்கமித்தமனம் சாலையோர சாதியானதொரு நாளை என் சிறு நாட்காட்டியும் குறிகாட்டும் இன்றும் என்றும்..
துக்கத்தின் திரட்டல்களால் தூரப்போனேன் நானும் நிம்மதியின் தூதுவரே இல்லாமல் தனித்திருந்த அந்நாளில் .....

சத்தியமும் சோதனையின் சூட்சுமமும் வெட்டவெளிதான் என் மனக்கண்ணினிலே...

நேர்மையின் பத்தியமும் துணிச்சலின் திறனும் மங்கா மனவொளிதான் என் நிஜகண் முன்னினிலே...

தெருவோர சத்தங்களும் வெறிபோன்ற துக்கபுயலும் ஒரே சூறைதான் சின்னவென்னுடலை...

சாதிமத பேதமின்றி சகலர்க்கும் அர்ப்பணமான கால்தூசியதன் கலங்கள் தூறல்களுமங்கு குழப்படியாம் என்னில் விடாமலே..
வாய் மூடி நானிருந்தேனன்று சூரியச்சகா வெயில் வாட்டல்களால் நா கூட வரண்டது நானும் அறியாமல்..

கல்லூரி ஆண்களும் மனதை களவெடுக்கும் பெண்களும் கண்கொள்ளா காட்சியாகியதன் களிப்புத்தான் அன்று முழுதும் கலங்காமல் நானிருக்க...

சூது இல்லா குழந்தைகளும் சாதுவான தாய்மாரும் சோடியாக போயினரே சொல்ல வார்த்தை வேறெதுவுமில்லை..
சில்லுருளும் வண்டிகளும் சொல் வசை பேசும் அதன் இசையும் சங்கடத்தை பெருக்கியதே அதனால் மனசக்தியை முழுதும் இழந்தேனே...

நடைபாதை தடத்தினில் நடக்காமல் இருந்தவேன்னை நடவென்றார் சிலரன்று நானறியா நயவஞ்சக சொற்களினால்..

சிலகாலம் இருப்பேன் என்றேன் என் மனது சிதையாமல் இருக்கட்டும் என்றேன் சிரிப்பாலே சிதைத்தாரவர் சினம் கொண்ட அவர் பார்வையினாலே..

சத்திரமும் அதுவில்லை என் பாத்திரமும் அன்று சரியில்லை .நிற்பதுவா நடப்பதுவா என்ற நிலை எனக்கு புரியவில்லை ..நிலையில்லா ஆளாகி தனித்திருந்தேன் நானும் அச்சாலையோரத்திலே...





கல்லூரி காலமதில் காணாத வாழ்வியல்பு ,இன்று நில்லாமல் சுவைக்கிறதே நீ வந்த நேரத்திலே...

மனதெல்லாம் உன் சுகம் வீசும், மாறுதலை என் மனதில் உணர்த்தும்,
பூ போன்ற உன்னாலே பூரிப்புத்தான் என் உள்ளாலே...

சொல்லாமல் செல்வாய் நீயும்,என் சோகபோதை தவிர்த்தாய் நீயும், செல்லரித்த என் வாழ்வில் செல்லமாயே வந்தாய் நீயே..


வானம் உன்னை வணங்கியதும் வாய்திறந்து முழங்கியதும் பூமியதன் விளிம்பில் நானும் புது மாரிமழை யுன்னால் நனைந்தேனே..

மாறுபட்ட என் மனதை புதுச்சாறு கொண்டு கரைத்தாய் நீ,தாறுமாறு இன்றி எனைஇன்று தரம் கணித்தும் விட்டாயே...

நிலாவதில் மெய் மறந்தேன் ,நானும் உன்னை இரா கனவில் நிதம் அதன் தோற்றம் உணர்ந்தேன், குணாவில் சிறந்தவள் உன்னை என் மன வினாக்கு விடையாய் இன்று கண்டதிலே...


நெஞ்சில் உள்ள நெகிழ்வுகளும் உன் மன பிஞ்சில் உள்ள பிரியங்களும் கொஞ்சிப்பேசி குலைகிறதே கோலமவள் உன்னாலே...

ஆசையென்னும் உணர்ச்சியில் அனுதினமும் அணைவாய் கிடந்தேன், என்னில்சாத்விகம் தந்தவள் உன்னை சத்தியமாய் நினைத்த பொழுதிலே...

மரணத்தில் வரம்பில் நானும் வழுக்கித்தான் கிடப்பேன் என்றால்,அந்நிமிடத்தின் நொடிப்பொழுதில் நீ வந்து எழுப்பாயா!!


காலத்தின் சக்கரத்தில் தோய்ந்திருக்கும் நிமிடங்கள்....

ஞாலத்தின் வாழ்வில் நான் கண்ட சில கணங்கள்....
மரணத்தின் பிடியிலும் உயிர் இழக்காத சில குணங்கள்....
தாராளமாய் வந்த தவிர்க்காத மன நிலைகள்....
நூலிழையில் சிதறிய என் சிறப்பான சிந்தனைகள்....
மனதில் சிற்பமாய் இருந்த உன் நினைவலைகள்...
தினம் பொழுதும் மனம் சொல்லும் மறவாத உன் வெருட்டல்கள்....
மன சினம் தள்ளும் சிறப்பான உன் நகைப்புகள் ...
நேராக மனம் மோதுமென்று மோப்பம் பிடித்த அந்நாட்கள்...
தளராத என் நெஞ்சில் தரம் கணித்த உன் மறு மொழிகள்..
மறுத்தாலும் பேச துடிக்கும் மறைவான உன் குணங்கள்...
தனித்திருந்த நொடிகளில் தவிர்க்காத உன் அமைவு..
சாவின் விளிம்பிலும் சளைக்காத என்னுடலில் உன் உயிரின் அமைவு..
பிணக்கங்களுக்காய் ஏங்கும் சோகங்களை பிதற்றலடிக்கும் உன் பேச்சு..
சுணக்கமில்லாமல் சத்தியம் பேசும் சாதுரிய மொழியழகு..
நேரத்துக்கு இடைஞ்சல் கொடுக்கும் நெருக்கமான ஓயா உரையாடல்கள்...
தாராளமாய் உன்னை கேட்ட அன்று ஓரமாய் ஒதுங்காத உன் ஒற்றை மன வேலி...
ஆதவனை பார்த்து அவனழகன் என்று பொறமை கொண்ட உன் சேய் நெஞ்சம்..
நிலாவும் பார்த்து வேற்றுமை சொல்ல துடிக்கும் உன் உடலழகு..
விசைப்பலகையில் உன் பெயரை மட்டும் அழுத்தும் என் விரல் அமைவு..
பாடல் வரியதில் உன்னையே வர்ணிக்கும் கவியழகு...
என் கையெழுத்தை நிலை மாற்றி உன் சொல்லெழுத்தாகும் உன் திறமை ...
என் வாழ்வின் தலையெழுத்தை மாற்ற துடிக்கும் சொந்த உறவு ...
பிரிவொன்றில் பிரிந்தாலும் பிறப்பினில் பிரியாத உன் சிறப்பு..
என் தூக்கத்தை நீடிக்கும் துடிப்பான உன் நினைவுக் கனவுகள்..
காற்றோடு கலந்திருக்கும் என் மூச்சில் உன் சுவாச காற்று...
சலசலப்பான இக்கவியில் சிலசலிப்பு காணாத உள்ளம்..
கலையொன்றாய் உன்னை கூறுகிறேன் கவனித்துதான் பார் என்னை ...


அனைத்துலகம் கூறும் நிஜ அனுபத்தை கேளு...

அடிமாட்டு வாழ்க்கையதை அடியுடனே வெட்டு..

உடலில் கணத்துக்கம் இருந்தால் கண்ணீரால் நீக்கு..


மனக்கணக்கு போடுவோரை உன் மதி கொண்டு வாட்டு..


நிலையற்ற வாழ்வுதனில் உன் நிம்மதியை தேடு..


நீண்டகால நினைப்புகளை நிஜமாவே மாற்று..


உலக்குக்காய் வாழ்வதனை உன் பிறப்பினிலே உணர்த்து..


இப்பிறப்பில் நீ செய்த தவறுகளை தாழ்த்து..


மனதாலே மங்கையரை மறைவாயே நோக்கு..


மனம் திறந்தால் மறைக்காமல் மணவறையை காட்டு..


இளமையினில் இளவயதை நீயும் இழக்காமல் பாரு..


முதுமையிலும் இளமனதை உன் முயற்சியினால் மாற்று..


மனு நீதி கண்டோரை உன் மனக்கண் முன் நோக்கு..


அநீதி அடங்காமை அதுகொண்டு போக்கு..


சிறப்பான உன் வாழ்வை சிலை போல ஆக்கு..


சிதறாமல் பதறாமல் உன் வாழ்நாளை நடத்து..


நீ செல்லும் பாதையெல்லாம் உன் நினைவாயே மாற்று..


மாறாமல் நீயிருந்தால் நீயே மாமனிதன் ஆகு ..


நீள்கால வாழ்வதனில் நிலையற்ற வடுக்களிங்கு
மறந்தாலும் நிலைத்திருக்கும் மாயம்தான் என்மனதில்..
சிலகாலம் வாழ நினைத்தேன் சில்லென்று குளிர்ந்திருந்தேன்
வாய்ச்சொல்தான் இன்றும் சொந்தம் மூச்சுகாற்றோடும் உலவுதிங்கு..

நாவினிக்க பேசினாலும் சுற்றத்தில் நயவஞ்சக பார்வைகளே
மனம் விட்டு கதறினாலும் மனிதராய் மதிப்போர் எவருமில்லை. .
அநாதியான ஆவியுடன் இன்றும் நானும் அநீதியுடன் பிணைந்தேனே..
சமாதிதான் வேண்டுமென்று சாகவும் துணிந்தேனே..

பிறந்ததினால் செய்கடமை நினைவில் ஞாபகமாய் சுழல்கிறது..
நினைத்தாலும் செய்வதற்கு என் நிழல் கூட மறுக்கின்றது..
மதில்மேல் பூனைபோல நானும் மறுமொழியை தேடினேனே
மறுமொழியும் கிட்டவில்லை மறைமுகமாய் இன்று ஒதுங்கினேனே..

வெட்டவெயிலும் கூட என்னையின்று வெறுத்துத்தான் பார்க்குதிங்கு
உள்மனத்தில் சுட்ட வடுக்களும் கூட ஆறாமல் வலிக்கிறது..
புவியிர்ப்பு விசைகூட என்னில் தோன்றாமல் குறைகிறதே
நிலைக்குத்தாய் இல்லாமல் நானும் நிலையற்று போனேனே..

சிறகெதுவும் இல்லாமல் நடுவானில் நானுமிங்கு பறந்து திரிகிறேனே
கொடிய வேதனையை தந்தவனை நானும் சோகமாயே வாழ்த்தினேனே.
சிலிர்ப்பான என்னிதயம் என்றோ சிதறலாகி போனதே அதை பொருத்த சில்லறைகள் கொடுத்தாலும் பிறருக்கு வீண் செலவாகி போகுமோ....

உடலதுவும் உயிருடன் மோதலாகி பிரியுமோவென்று கணப்பொழுதும்
கவலைதான் கணக்கெடுப்பார் எவருள்ளார்..
விடைதெரியா கணைகளால் தினமும் கேள்விக்குறிதான் என்னில்
விளையாட்டாய் விடை சொன்னாலும் விலைமதிப்பும் அதற்கில்லை..
சொர்க்கமா நரகமா இல்லை பூவுலகில் அலையும் ஆவியா
புதுமையான புதிர்களுடன் அந்தரத்தில் நானின்று..



உலகமெங்கும் உறைந்திருந்து உண்மையிலே நனைந்திருந்து
உயர்வாக இருந்த நீதாண்டா தன்மான தமிழா!
உள் வேதனையை சொல்வாயோ
இல்லை உன்மனதால் சாதனைதான் படைப்பாயோ.
சரித்திரத்தில் நீயும் நன்கு சறுக்காமல் பதிந்தாயே..

கொதிதெளும் உதிரமும் கொல்லாத பார்வையும்
தனிப்பெரும் சொந்தமாகி உன்னுடனே பிறந்ததே.
உன்மேலும் கொட்டாத மழையென்ன
உன்முன்னும் போகாத உயிரென்ன ..
வெறுத்திட்டாய் வாழ்வதனை அதன் விலைமதிப்பை உணராமலே..

புரட்சியது உன் திறமை சனிபெயர்ச்சி கூட உன் பகைமை
சாத்திரமும் கணித்தாயே இன்று சாகவும் துணிந்தாயே..
வீரம்தான் உன்மனது மனகாரமது தெரியும் உன் செயலில்
சிலைக்குறிப்பாய் செதுக்கலாமே உன் சிறப்பான வாழ்வதனை..

கண்களால் கதைத்தாயே மனதாலே வாழ்ந்தாயே
சரித்திரத்தில் இடம்பிடிக்க தசாப்த சாதனையை புரிந்தாயே.
சட்டங்களை போட்டவனே சாவகாசமாய் அதுள் நுழைந்தவன் நீ
திட்டங்களும் வகுத்து முழுத் திருப்தியாய் இருந்தாயே..
சொந்தங்களை இழந்தாயே சோகங்களை கொண்டாயே
சொல்லவும் முடியாமல் வாய்மூடி மௌனியாய்தான் போனாயே.

தமிழ்மொழிதான் உன்தாயாம் பொய்யாமொழியது உன் படிப்பாம்
மெய்யாலே தோற்றாலும் தமிழா நீ மெய் மறக்காய் உன் நிலையை..
வெளியூரில் சிலர் சிணுங்கல் உள்ஊரில் பலர் முணுங்கல்
உலகமே அன்றொருநாள் உந்துணிவால் ஒன்றும்தன் குரலால் உளராமல் போனதே.

உரிமைக்காய் உயிர்ப்பிணையாம்
சொந்தமண்ணுக்காய்உன் உடலாம்
என்னென்று உருவெடுத்து வந்தாயே
நிலைமாறி இன்று உருக்குலைந்து போனாயே

அநீதியை வெறுத்தவன் நீ அகம்பாவம் பொறுத்தவன் நீ
அஞ்சாத ஜீவனாக அன்றோர் தமிழன்னை மடியில் உதித்தாயே .
சினம் கொண்டால் சிறுத்தையவன் நீ
மனம் கொண்டால் மாரீசன் நீ
மறையோனும் உன்னிடத்தில் தயங்காமல் மடிப்பிச்சை எடுப்பானினி.
தொலைதுறைகள் துளைத்தவன் நீ
வதைச்சிறைகளில் சிதைந்தவன் நீ
அரையுயிராய் இருந்தாலும் மானத்தமிழனாயே மாறாமலே இருந்திட்டாய்..

மனத்துரோகிகளும் உன்னிடத்தில்
மானமிழந்தவனும் உன்னருகில்
மயங்காமல் இருந்திட்டால் இனிநீயும் மாமனிதன் தானன்றோ..
தடைகளும் மாயகுடைகளும் தவிடுபொடிதான் இனியுனக்கு
கணநொடியில் உடைத்தெறிவாய் என்றும் நீ தலைநிமிர்ந்து நடந்திடுவாய்..

வளமான வாழ்விடத்தை வாய்திறந்து கேட்டவனே
வழியெங்கும் விழிதிறந்து விரதமும் பிடித்தவனே
அதற்காகதானின்றும் அடங்கா தமிழனாய் நிலைத்தாயே..
எழுபிறப்பில் உதித்தாலும் உன் பெயரென்றும் நாட்குறிப்பில் எழுதப்படும் இச்சிறுகுறிப்பாய் சொல்கின்றேன் இனியும் நீ சிதறலாகி போகாதே.


வெள்ளை உள்ளங்களின் சங்கமாம் வெகுளியான காலத்திலே..
வஞ்சகமும் வாட்டுமாம்..
மனம் திறந்து கூற அதுவும் தெரயுமாம்..
உயிருள்ள ஜீவனில் இதுவும் அலையுமாம் . .
ஜீவனல்ல இது மனதின் அஜீரணமாம்..
கறுப்பாடு தானதுவாம் எம்மவர்களில் பலரிலிது உறையுதாம்..
கத்தியும்தான் உடன் வெட்டும்..
கத்தியை விட கூர் மனதையிது அறுக்கும்..
துரோகமும் மறு பெயராம்..
துவளாதீர் இதை கண்டால்..


எம்முடனே கூடவிருக்கும்..
எம்மனதும் நன்கறியும்..
எம் குணமும் அது கொள்ளும்
இன்னொன்றும் கூடவே இருக்கும்..
ஏமாற்றம் அதன் பரிசாம் உம் மனமும் புதுசாய் வெறுக்கும் ..
ஆத்திரம்தான் அதன் விளைவாம்.
உம்மையும் நிலை குலைக்கும்..
நாமறியோம் அதன் விளைவை கண்டதும் கண்ணால் உண்மையே..

சில்லென்று தானிருக்கும்..
சிலகாலம் சிறகடிக்கும் ..
சில்லறைதான் நீர் பெறுவீர் ..
அதன் செயல் தான்காட்டும்..
நம்புவீர் அதையன்றே நல்லவனாய் நல்லதையே நடிக்கும்..
உம் மனதை அலைய வைக்கும்
தன மனது தான் அலையாமலே..
எதிரிபோல் நடை காட்டும்..
மதுநண்பனாய் நீ காண்பாய்..
நட்புக்கும் எதிரியாம்
எண்ணுவாய் நீ கூட இன்பத்தின் விளிம்பதில்..

உம் உரையை உடைத்தெறியும்
உடைவாளும் நொறுங்கி போகும்..
ரகசியங்கள் மெய் மறக்கும் கூடா நட்பு கூட இருந்தால்..
உன் முடிவை அது எடுக்கும்
எதுவும் உன்னால் முடியாமலே போகும் ..
உன் எதிரியவன் அவன் நண்பன்
நீ நம்பாய் அவன் கதையில்..

தைரியமும் தான் உறங்கும்..
உன் கனவெல்லாம் பொய்யாகும்..
நல்லெண்ணம் தான் விலகும்..
அதநெண்ணமும் அதுதானே..
என்றென்றும் நோக்கிடுவீர் உன் நட்பின் நிஜ ஆழத்தை ..
விரட்டிடுவீர் மனம் சொல்லும்..
விரட்டாதீர் உன் நா சொல்லும்..
உம் வாழ்வு உம் கையில் கடலலை
போன்று அது அலையலாமோ..


ஓய்ந்திருந்து ஓயாமல் அழுது
ஒளிவாயே இருந்திட்டாய் நீ..
ஓலமாய் கூவினோரும் ஒய்யாரமாய்
போயினரே .. நீ வருவாயே
என்றெல்லா விழி திறந்து
காத்திருந்தேன் நிஜமாவே..


முப்பதின் தசாப்தமாய்
முடிநரைத்து நீ இருந்தாய் ..
முந்நான்கு மாதமதில்
மறுபிறவியதனை எடுத்தாய்..
முழங்காமல் இடித்துவிடு தமிழனவன்
வேதனையின் சோதனையை..
உன்னாலே நடக்குமென்று
நாடொறும் கனாதேவிக்கும் தொல்லைதான் ...

சொந்தமாய்தான் இருந்தோம் சொல்லாமலே பிரிந்தோம் ..
எம் நாட்டில் உண்மையதில் பொய்யிருக்கும்
உன் எஜமான் இன்று யாரோ!

கரும்புகையை கசிந்து விட்டாய்
நிலக்கரியை விடாமல் தின்றாய்..
நிறுத்தாமல் புகைத்ததாலோ எஞ்சின்
புற்றுநோயும் வந்ததோடி உனக்கு..
புகைக்காதே உனக்காக நிலஎண்ணையும்
இருக்குதடி உன் உடலில் உறிஞ்சி
கொள்ளு நீ நிறுத்தாமலே..எதிர்காலம்
உனக்கினி நன்றுதான் எதிர்திடுவாய் வரும்
நஷ்டமதையும் ஓடி நீயே விலத்திடுவாய்..

தென்னிலங்கை மீன்களும்
வடவிலங்கை சுறாக்களும் நாடெங்கும்
யாழ் மீட்டி இசைபாட யாழ்தேவியாய்
ஊர்ந்து வருவாயோ ..தேவதையாய்
பூமிதேரில் ஏறி என் கண்முன்னால்
நகர்ந்துடுவாய்..காவியமும் எழுதலாமடி
உன் இறந்த கதையை கேட்டு ...
இறக்கவில்லை நீ கூட எம்
மனதில் நிலைதிருந்தாய் மறையாமலே..

வசைபாடும் மானிடனும்
வாஞ்சையில்லா மாமனிதனும்
வாய்திறந்து இசைமீட்க யாழ்மண்ணதில்
புரள்வாயோ ...உலகெமெல்லாம்
தமிழினத்தின் உண்மையதை
சொல்வாயோ..நடத்துகின்ற
புரட்சிகளால் இனியும் நீ மடிவாயோ.!

தெருக்களையும் கடந்து சென்றாய் ..
எம் பாத செருப்பதனை ஏற்றி செல்வாய்..
ஈழவரின் சேவகனாய் தலைநிமிர்ந்து
வாவேனின்று ..
காணவில்லை நேரெதிரே
மறைந்திருந்தாய் ஒரு புதிராய்
மாயவனும் விலகி சென்றான்
மறைவாக இருக்கலாமோ..

மந்திரமும் எம்மவர்க்கில்லை
உன் உடல் எந்திரமும் எம் சொந்தமில்லை ..
வேதனையை தந்தவள் நீ துயில்
சோம்பலாயே இருக்கிறாயே..

இடைவிடாமல் துடிக்கும் தன்
இருதயமும் ஒலியெழுப்பும் உன்
ஒலியதனை எதிர்பார்த்தே..
நாம் காணாமல் கருத்து
சொல்வதை புதுக்காவியமாய் படைப்பாயோ..


ரகசியமாய் ஒன்று கண்டோம்
நாமங்கு முக புத்தகத்தினில் அவள்
உள் முகமறியாமலே...
பார்த்ததுமில்லை கதைத்ததுமில்லை
பயம் தான் சற்றே அன்று
எம்முடனும் அவளுக்கன்று..

ஓரிரு வார்த்தைகளாம்
வருடாத பேச்சுகளாம்
புரிந்தது அவளுள்ளம் அன்றே
நன்கு...

இறைவனுக்கும் பரிசுதான்
அதுபோன்ற நண்பியார் எம்முடனே
ஒருத்தியன்றோ..

அடக்கமும் பணிவுமாம் அவள் கரங்கள்
அடக்கவந்தாள் அடங்கா ஜீவன்களை
வீரமது வனிதையாக..
கனாகூட அன்று காணவில்லை -
நாமும் கண்டோம் இன்று கனா காணும்
காலங்களில் அவள் ராகவியின் பிரதியன்றோ..

நட்பென்றால் ரசிகையாம்
அவளோ நட்புக்கோர் இலக்கணமும்
எழுதியே உள்ளாள் ..
அறிவுரைகளாம் பலதந்து
ரகசியமாய் ரசித்த அவளும்
ஒரு ரசிகையன்றோ..

பேச்சிலும் குழந்தைத்தனமாம்
அவள் இன்னும் குழந்தைதான் என்பதை
நண்பர் நாமறிவோம்...
யார் சொல்வார் இதையெல்லாம்
நாமறிவோம் நன்கே சொல்வோம்
இக்கவியாலே..

சேயுள்ளம் தான் இவளுக்கும்
தன்  தாயதன் பாச முடிச்சை
அவிழ்க்காமலே இருப்பாள் என்றென்றும்..

பிறருதவி தான் செய்வாள்
தன் கருமம் போலெண்ணி
தன்னினிய நட்புகனிக்க..

சொந்தமென்றால் சோகமாம்
இவள் வாழ்வில் சொல்லிவைத்த
வடுக்களாம் இவள் மனதில்...
கவலையில்லையாம் இனியங்கு
நண்பர்களால் மறந்தாளோ புரியவில்லை
இன்னும் எமக்கு ..

சிறு பிரிவொன்று வந்ததாம்
அவளுடனே அன்று பிரியவில்லை
நாம் கூட எம் பிரியா நண்பி அவளன்றோ..
எம் மனதில் சத்தியம் தான்
இங்கு கூட சாத்தியத்துக்கே இடமில்லையாம்...

பாசத்துடன் கதை பேசும்
பண்புடனே புன்சிரிக்கும் அவள்
முகமதுவும் நிலவதன் முகமன்றோ..

சொல்வதும் நாம் தான் ஏற்கமாட்டாள்
இதை என்றும் தன் அடக்கத்தினாலோ
நாமறியோம் ..

கல்விதான் அவள் இலக்காம்
அவள் கூட எம் போன்ற ஜீவனன்றோ...
எம் கொள்கை தான் அங்கு கூட சிறகடிக்கும்
விட்டிலாய் உலாவுது அவள் மனதினிலே..

எம் குழப்பம் தீர்க்கவந்தாள் எம்செல்ல
குறும்புகளையும் போக்க வந்தாள்..
உணவதையும் தன் தொல்லை என்பாள்
அவள் உண்ணுவதும் இனிமை தானோ..

நண்பரவர் நாமொழி கேட்பாள்
நட்பினிலே  நாடகம் அங்குமில்லையாம் ....
குறும்பு மனமது தானங்கே அவளுமங்கு
எம்மவர்களில் ஒருத்தியன்றோ..

தாயவளை தெய்வம் என்பாள்
அவள் தாய் கூட எப்பிறப்பிலும்
தெய்வம் அன்றோ...
நல்லண்ணன் உள்ளானாம்
நாலதுவும் அறிவானாம்
இவளுமத்தை புரியாளாம் சேய்தானே
இவளென்றும்..    


பிரச்சினைகள் தான் அவள் சூழலில்
பிரயோஜனமில்லையாம்
அது தெரியும் எமக்கு என்றும் ..
தெரிந்ததும் அவளுக்கும் கணக்கில்லைதான்
போகட்டும் என அவள் உள்மனம் வெறுத்து ..

உலகதன் முடிவரையும் உலவும்
ஜீவன்களில் ஒரு ஜீவனன்றோ இவள் கூட..
உலவிடுமாம் எம்முடனே எம்
நண்பியாக என்றும் பாசத்துடனே..
கவலைதான் அன்று எமக்கு சகோதரி
தானில்லை எம்முடனேஎன்று..
தீர்த்ததில் இவள் கூட எம் வாழ்வில்
மறையா ஒளியாக உதித்தாளோ ...


என் மனதை தைத்தவள்
நீ தையல் தேவதையே..
மனசை கிழித்ததும் நீயடி அதை
வருடி துவைத்ததும்  நீயடி..

தாராளமாய் வந்தவளே
பசும் தாமரையாய் இருந்தவளே
ஆதவனாய் இருந்து ரசிக்கின்றேன்
கணப்பொழுதும் மலர்வாயா
கண்களால் காணவில்லையடி
மனக்கன்னதுவும் திறந்தேனடி
உன் உருவம் காணவே என்னையும்
 நான் அறியேனடி..

எண்ணித்தான் வியந்தேனடி
உலகளவில் மலர்ந்தேனடி
புது மலராம் ரோஜாவாக புவனியிலே
உன் பவனியதை கண்டேனடி..

உன்னுடன் சொட்டுத்தேன்
களித்தனடி மனதளவில் சொக்கித்தான்
போனனடி சொல்லெதுவும்
என் வாயில் இல்லையே
சொல்லாமல் போட்டேனடி ..

காற்றதுவில் கலந்தவளே
மூச்சுக்காற்றாகி வந்தவளே
மூச்சுமடி திணறுதடி உன் மன
முக்காடும் விலத்திகாட்டடி..

முதுகெலும்பாய் இருந்தவளே
என்னுள்  முண்ணானாய் பிணைந்தவளே
உன்னை முட்டித்தான் பார்க்கிறேன்
என் மனம் முரடு தானடி..

கோவையாய் இருந்தவளே 
என்மன பூட்டையும் திறந்தவளே
நீ கோபித்தாலும் குறை சொல்லேன்
உன்மன சாந்தமும் நானடியோ.
இராகனவிலே சென்றவள் நீ
பட்டப்பகல் தனில் வந்தவள் நீ
என் மனதை ஒளியாகிதான் போனாய்
இரவதும் நான் தொலைத்தேனடி..

சோதனையை தந்தவள்
நீ மனதை சோதித்து பார்த்தாயடியே
சோகமாய்தான் நானடி மன
சோதிடனாய் இங்கு வாவடி..
மனதாலே கூப்பிட்டேன் மனதளவில்
இராக்கனவாக வந்தாய் நிஜமாக
அழைக்கிறேன்..
நிழல்போல தொடர்வாயா ...


நட்பெனும் கடலில் இணைந்தோம்
அன்று அலையாகி சென்றது அதுவும் இன்று....
கண்ணீரும் கலந்தது உண்மைதான்
அவ்வலையோடு சென்றதும் பொய்யாகுமோ!!

நட்புக்கோர் இலக்கணம் தேட
சென்றோம் நாமே -விடைகூட
கிடைத்தது விரக்தியில் இன்று..
கல்லூரி காலமதில் கண்டதோர் பிரிவு
இணைய வழியதனில் இன்னுமோர்
இணையா பிரிவு..

நினைக்கவில்லை ஒருபோதும் நடக்குமென்று
நடந்ததும் பிறர் நினைதாட் போலவே நன்று...

என் விழிகள் அழுவதும் கண்ணீரால்
தான் அன்றி உதிரமும் கூட வழியுது என்
முகத்தினிலே ...
நீர் அறிவீர்-மனமதும் சொரிகிறது
தன் கண்நீரதனை என்றும் வற்றா
என் மன அருவிக்கு தானோ ...

பிரிவதன் வலியும் தாயதன் சேய்ப்பிரிவும்
இணையென நினைத்தும் என் மனம்தான் இன்று...
உணர்கிறேன் அதை நன்கே என் மனமும்
சேய் தானோ புரியவில்லை எனக்கு...

என் பிரிந்தோர் பலர் உளர் என்மனமதை
புரிந்தோரும் சிலர் உளர்..
புரியாதோர் கூட புரிவீர் இதன் கொடுமையை
தம் மனதில் வெளிச்சமாகவே...

மனமெனும் பூவில் மணமது இல்லையாம் -இது
தோன்றியதும் இன்று தானோ என் மனதில் ..
மலரின் மணமது உணராத தனி மரமாகி நிற்பேனோ!
என் தைரியமோ வினவுகிறது இன்றென்னை..

நட்பதன் பிரிவை தாங்காத
என்னுள்ளம் நட்பதன் பெருமை
உணருமோ இனிக்காலத்தினில்...

கடலதில் கரைக்கின்றேன் நட்பெனும்
அஸ்தியை என் மனக்கண்ணீருடன்
சேர்த்தே இன்று ...

உடன் பிறந்தார் போல் பழகி
நாமெல்லாம் உலகத்தை
உணருவோம் இனிமேலே..
ஒரு தாய் பிள்ளை தான் நாமெல்லாம்
இப்புவியதன் கால சக்கரத்தினில் அன்றோ...


காலங்கள் கரைந்தோடும் உன் நினைவை விட்டுட்டு ...

அலையலாம் புரண்டெளும்பும் என்மன அலையை எழுப்பிட்டு..

பகலெல்லாம் இரவாகும் உன் மனவொளியே வீசியதால்..

பனியெல்லாம் நீராகும் உனக்காக என் மனகண்ணீர் பொழிய வரம் கிட்டும்..

காடுகளும் நாடாகும் புது உலகம் எமக்கு தந்திட்டு..

ஒட்சிசனும் நிலைமாறும் உன் சுவாசம் எனக்கு மட்டும் தந்திட்டு..

உறுப்பெல்லாம் செயலிழக்கும் என் இதயம் உனக்காக விட்டிட்டு..

நாவுமதில் நரம்பிளக்கும் உன் பெயரை ஓதிட்டு ..

கண்ணுமது குருடாகும் என்மனக்கண்ணை உனக்காக திறந்திட்டு..

மொழியெல்லாம் மறந்துபோகும் உன் பேச்சை கேட்டிட்டு ..

உயிர்கூட பிரிந்து போகும் என்னுயிரை உனக்கு தந்திட்டு .

நிகழ்காலம் சொல்லவில்லை உன் எதிர்காலம் நிர்ணயிக்கும் எம்மை ..

உயிரோடு நான் இருப்பேன் ஓருயிராய் உளமறிய வந்துவிடு..



பூமியதன் விளிம்பினில் சுக மணமதுவும்
நிலவும் வெண்ணிலாவது சகிக்காமலே...

பூமியதன் மூச்சே சுவாசமாம் எமக்குமது
வழங்கிடுதே எம்பிறந்த நாளிலே...

தன் சுழல்கையிலே எம் வாழ்க்கையதும்
சுற்றுலாவோ ஓர் காலத்திலே..

வாழ்கையை எண்ணுவதும் நாம்
நடத்துவது அதுவில்லையோ..

வாழ்க்கை சுழல்வதும் பூமியிலா வியந்திடும்
உம் மனதும் நினைக்காமலே ..

ஹோடியதன் உயிரும் ஓயாசேவகனாகும்
தன் உயிர் பிரியும் முன் இப்பூமியிலே..

உம் வழியால் கஷ்டமும் வேதனையும்
அவை உன் சேவைகளில் ஒன்றோ..

சுற்றுவதும் நிற்காது வாழ்கையும்
இறைரகசியமன்ரோ - சொல்லாது அதுகூட...

சுவாசமது தந்ததும் அதுவே உன்
வாழ்வில் சுவாரசியம் நிறைந்ததும் அதுவே...

நல்லவரோ கெட்டவரோ நாளெல்லாம்
பொறுக்குது தன் உளத்துன்பம் சொல்லாமலே...

நன்றி கெட்டவனாம் எம் குலத்தோன்
அவனவன் பெருமைகள் எப்பிடி சொல்ல...

தன் மூச்சை நிறுத்தினால் உன் பாடு
பெரும் பாடாம் எச்சரிக்கையும் ஒலிக்கும்
ஆண்டொன்றில்..

அனர்த்தங்களை தரும் தன் இயலாமையை
அறிவார் யார் இங்கே சொல்லும்..

நீதானே அறியாய் அதன் வலியை
உன் உடலில் நினைக்காமலே..

சந்ததியும் வந்துடுமாம் சகோதரனாய்
பிதற்ருகிரதை நீ கேளாய் ..

மர்மமொன்று உள்ளதாம் இப்பூமியில்
காண்போரும் நீயல்ல உன் வழியே அதுவாம்..

நீ மூச்சு திணறியது நினைவிருக்கும்
சுனாமியாய் கண்ணீரை இறைத்தும் கவலையல்லவோ...

புரியவில்லை நீ கூட எல்லாம்தான்
வற்றாத வடுக்களே ...

இனியாவது புரிந்துடுவாய் எண்ண மன
ஓட்டங்களும் உன்னிடமே உள்ளது...

இல்லையெனில் தடுக்க மாட்டாய் உன்
மரணத்தையும் இயற்கையினத்தையும் தானே..

ஓரிரு ஆண்டுகளாம் அதுக்குகூட
சொன்னதும் உன் போன்றோர் சிலர் தானே..

நடப்பதை பார்க்கவா துடிக்கிறாய்
திருந்தமாட்டாய் உன் நடப்பாலேயே...



நிலவே நின் முகம் கண்டு நிஜமாவே சிலைதானடி நாள்தோறும்...

நீ மட்டும் தேய்கிறாயோ உன் நினைவால் சோகமதுதான் எனக்கும்..

என் மனசிலையது கண்டாயோ அதுவோ கவலை உனக்கு..

உன் தேய்வை கண்டதும் என் நிஜ விழிதான் அது மனவிழியல்லவே ..

உளறுது என் மனசு நீயுமதை அறிவாயோ தெரியவில்லையே ..

உன் உயிரதுவும் இருப்பது என் உடலதனில் இல்லையோ..

என் உடலதனை எடுப்பாயோ உன் உயிரதனை திருடி ..

உன் ஒளியதனை தந்து என் மன வெளிச்சத்தை தந்தாயே..

நம்ப மாட்டேன் நானுமென்றும் நீயுமதை செய்வாயோவென்று...

உன் சோகமதை அறியேன் நானும் தயங்காமலே கூறு..

தகர்த்துடுவேன் சில நாளில் உன் வானுலகும் அதிரட்டும்..

சிணுங்குகிறாய் என் காதில்இனிய சங்கீதமாய் இருக்கு...

சொல்கின்றேன் செல்லமாயே என் செல்ல கிளியே நீ கேளு..



புத்தாண்டுமொரு புது வரவாம் உம் வாழ்வில் இன்று முதலே..
புத்தொளியும் பரப்பிடுமாம் புது சூரியனாய் உதித்ததே இன்று..
புது மனமும் தந்துடுமாம் நம் சோகமதையும் மறந்திடவே..
கொண்டாடுவீர் நீருமதை உமக்கான நாள் இதுவோ..

இறைவனும் உம் தோழனாவான் உம் மனதும் அவனன்றோ..
நினைத்திட்டால் உம் மனதில் நிலைத்துடுவீர் நெடும் காலம் இவ் உலகில் ...
புவியெல்லாம் புதுவாசம் அது கூட புது மலரன்றோ..
உணர்ந்துடுவீர் நறு மணத்தை இங்கு உம் மனதும் மென்னை தானே..

உறவினரும் உம் பிரியமே அது தெரிந்தும் இன்னும் சோகமேன்..
பிரியங்களை சேர்த்துடுவீர் புத்தாண்டு இன்றல்லவோ..
நண்பரவர் பழகிடுவார் நாவினிக்க பேசிடுவார் ..
சகோதரனாய் போற்றிடுவீர் அவர் மனமும் ஏங்குமன்றோ ..

தன் நினைவை கொண்டுடுவீர் தன்நம்பிக்கையதையும் பெருக்கிடுவீர்..
தன் சோகம் மறந்துடுவீர் அதை தம் பகைவனும் ஆக்கிடுவீர் ..
மாயமதுதான் விலக்கிடுவீர் மன போதையதை விலக்கிடுவீர்..
இதை விடவும் செய்ய உம்மால் முடியும் முயற்சியில் நீர் இறங்கினாலே..

கல்வியதை போற்றிடுவீர் கல்லாததை விளங்கிடுவீர்..
உலகமதை விரும்பிடுவீர் உம வாழ்க்கை அதுவன்றோ..
மெய்யதனை சொல்லிடுவீர் சத்தியமாய் இருந்துடுவீர்..
சரித்திரமும் கண்டுடுவீர் மா மனிதரன்றோ நீர் கூட...


எம் நெஞ்சம் பேச துடிக்குது இவ்வாழ்நிலை தானோ காரணமென்று...

மனம் சொல்லுது கேட்பீர் உம்மனத்தால் தான்  உணர்வீரிங்கு  ...

உறங்க மறுத்த விழிகளால் உதிரம் வடியுதேனோ  ...

மனக்கண்ணின் நிலையது தெரயுது என் சுவைக்கவியிலிங்கு  ...

காரணமும் மன சோதனையும் தான் கருவிகளாம் இங்கு..

புரிவீர் நீரும் எம் துயரதுவும்  வருத்தாது உம் வாழ்வில் கறையாக  ..


உயர்தரமாம் ஒன்று கண்டோம் எம்மவரின்  சொத்து போன்றே..

துரத்திதான் பார்த்தோம் விடாமலே  அதையும் கூடவே  ..

எம்மால் தொடத்தான் முடிந்தது மனதளவில் நன்று....

புதிய அனுபவம் தான் அதுவும்  மறக்காது எம் வாழ்வில்...

மறந்தாலும் நிலைக்காது எம் உயிர் எம்முடனே இராமல்..

ஆருயிராய் மூன்று கண்டேன் தோழராகவே நானும் அங்கு ...

என்றும் நிலைக்கும் நாளையும் தோழர் மனங்கள் என் நினைவினிலே  ..

நான் கண்ட கனவு நினைவாகும் நம்பிக்கைதான்  என் மனதில் இன்று..

தோழரது  கனவும் அதுவென்று புரிந்தேன் நானுமன்றே ...

படிக்கதான்  கிளம்பினோம் கனவுக்கு பதில் நாம் சொல்ல தான் வேறெதுக்கு  ..

நடத்தினோம் படிப்பைகூட செல்லமாய்தான் ஆசையுடனே  ..

எம் மனமதுவும்  மாறியதோ  ஏனென்று சொல்வேன் தமக்குமது  தெரிமோ...

பல்கலையும் கற்க ஆயத்தமாம் நாம் இன்று அதுவரையும் தான் அன்றோ இதுபுரியாது..

மனதில் இருபதுவோ பல சோக கறைகளாம் சில்அனுபவம் கூட அதிலுண்டு..


என் நண்பன் அனுபவம் தான் முதல் இங்கு சொல்லுது நீரும் நன்றேகேளும்...

சென்றவனாம்  இடமொன்று படிக்க அல்ல வதைபடவே தான் என்று சொல்வதும் என் மனம் தான் ..

ஒரு வருடம் இல்லையாம் அவன் வாழ்வில் மறைந்ததும்  இருட்டாகவே...

அக்காரண காரர்களையும் நீர் கூட அறிவீர் என்றும் சோகம்தான் ...

உயிர் மட்டும் தான் உடமைஎன்று அவன் மட்டும் வந்தான் எம் கண்முன்னே..

நாம் கண்டோம் அவன் மனதை அவனை அல்ல மனக்கண்ணீரை தான் அன்றோ ...

கணிதம் என்றால் மன பிரியன் தான் அவர் கூட நன்கெமக்கு தெரியும் அதுவும் கூட ..

பயமென்றால் மறுசகாவாம் மனதில் அவர் சொல்லார் அதை யாம் அறிவோம்...

சிந்தை தான் சித்திரிப்பு தானோ!!அதுதானோ அவர் மனது மென்மை என்று கண்டேன் நானும்...





மற்றொருவன் என் சகாவாம் பௌதீக பிரியனாம் அவனும் அங்கெ..

நான் கண்டதும்  அவன் வாழ்வில் பெரும் அனுபவம் தானோ..

பார்த்தாலே  மனம்  நடுங்கும் பயங்கரமாய் அவன் மனம் கண்டு..

பயமென்றால் அவன் வாழ்வில் அர்த்தம் ஏதாம்!! அவர் சொல்வார் எமக்குகூட அதை நன்றே.....

இருட்டென்றால் கஷ்டம் தான் அவன் மனதை நாமறிய...

என் விழி கண்டது அன்றொருநாள் நன்கே புரிந்தது அது எதுவென்று...

நான் சொல்லேன் அதை இங்கு என் மனம் துரோகியல்ல அவனுக்கு என்றும்..

பல்கலையும் கற்க செல்வான் அவன் கூட திறமையின் பரிசதனை பெற்று..

என் செய்வது ஆமை தான் அவன் நடையில் கூட யாம் கண்டோம் பல அனுபவம் தான்...

வெறுப்பு வள்ளல் நீ என்று பட்டமாம் பிடிக்கவில்லையாம் அப்பட்டம் கூட...

என் செய்வோம் நாமும்   மாறிவிட்டான் அவன்கூட மனத்தால் இன்று..




அனுபவசாலியது  எம்முடனே  ஒருவனாம் பெருமைதானோ எமக்கு நன்றே...

இவர் கூட பார்த்துவிட்டார் சோதனையின் மறுபக்கத்தை எம்முடனே...

முடிவுகளை தெளிவாக்கும் இவர் மனதை நன்கறிதல் எம் கடமையன்றோ...

என் நா கூட அடங்கும் இவர் மொழியில் என்றென்றும் ...

அனுபவ  எல்லையது  அறிவதுதான் அவர்  இலக்காகுமோ....

அவர் சொல்வதில்லை எதுவும்  நாம் சொல்வோம்  அவருக்கு நன்றே...

தன் மனது தான் அறிவார் எம்மத்தை அறியவைப்பார் எமக்கு கூட..

எம்மன வலிமை எதுவென்று அறிந்ததும் இவர் மட்டும் தானோ!! புரிகிறது எமக்கு....

பல்கலையும் இவர் கற்பார் நீர் அறிவீரோ  அவர்தன்  திறமை...



என் பற்றி யான் சொல்லேன் என் பேனா எழுதாது என் முன்னால் ..

நீர் நன்கறியலாம் என் சகாவிடம் நின்பேனாக்கு தெரியாமல்...

என் பேனா பொய் உரைக்காது இவ்விடம் சொல்கின்றேன் அதைகூட...

நான் கூட ஓருயிர் தான் உம்போல தான் என்று நான் சொல்வேன்..

நம்புவதும் இல்லாததும் நான் அறியேன் என் மனத்தால்...

இவ்வளவும் தான் சொல்லும் என்மன வாயில் என் பற்றி இங்கு ..

மனதடக்கம் வேணுமன்றோ எம் போன்ற ஜீவனுக்கு அதையும் நன்கறிவீர் நீரும் என்றோ...




இத்தனை மனதுக்கோ  பல குறைதான் நானே உரைப்பேன் என் கடமையது..

எம்முரிமை எமக்கு இல்லை அழுகிறது எம் நெஞ்சம் இன்றும் ஓயாமல்..

கொள்கையுடன் தொடங்கினோம் நான் மனிதர் தான் அன்றோ...

அராஜகம் மடியும் உம் போன்றோர் துணை நின்றால் எம்முடனே.....

பெண் கூட எம் குழுவில் ஒராள் .. நமபுவீரா இதைகூட நான் சொன்னால்...

ஆலோசனைக்கு தான் அவமனது வேறு எதுக்கும் அல்ல..

இவ் விடம் கூறுவேன் அதை மட்டும் என் கவியால்...

நண்பிகள் தான் கொண்டோர் அவர்நல் மனது நன்கறிவார்....

மூநான்கு சொன்னார் எம்மக்கும் கூட ஏச்சுடன் தன் மனபேச்சுகளை ..

அவர் உரைத்தது உண்மைதான் எமக்கு உறைத்ததும் உண்மைதான்...






வேண்டுகின்றோம் இக்கவி கொண்டு தோள் கொடுப்பீர் நீரும் எமக்கென்று....

மரணம் கண்டு ஒளிப்பவர் நாமல்ல மரணம் ஒழியும் எம் வரவால் என்று நாம் சொல்வோம் ...

நன்றாக விளங்குவீர் நீர் கூட..புரியாதோர் கிடக்கட்டும் எனக்கென்ன..

அகிம்சை சொல்லும் எம் வழியை செல்வோம் அதன் வழியில் நாம் என்றும்...

சொல்கின்றேன் கேளுங்கள் எம்பாதம் தான் மிதிக்கும் எம்மண்ணை என்றோருநாள்...


என் மனதிலும் அறியா சோகமாம் நானுமதை  நினைக்காமலே....

அமைதியே தேடி அறியாமலே   சென்றேன்   கடலதன் மடியில் உறங்க .....

இள மாலைதானோ சோகமது மறையும் எண்ணினேன் நானும் அன்று ...

செவ் ஆதவனும் பார்த்து இளித்தது என் சோகமதையும்  கண்டு...

என் கலங்கல் மனமதுவும்    மாறவில்லை அக்கணமும்  அங்கு..

என் கால்களும்  நனைந்தன இசைபாடும்   தண்ணீரால் இடைவிடாமலே....

கடலலை அதுவோ  தானென்று  என்றெண்ணினேன் அதுவும் அல்ல ..

  என் கண்ணீரும் அதுவல்ல  என்றேனக்கும்  தெரியும் நன்கே...

சூரியனை  பார்த்தேன் நானும் ஒரு விரக்தியாய் தானங்கே .. ..

 புரிந்தேன் அப்பொழுதில் நனைத்தது  அவன் கண்ணீர் தானென்று ..
 
ஜோசிக்கவில்லை நான் கூட  என் சோகம் அவனுக்குமென்று ...

என்னுள் சொல்லியது என் போன்றே அவனுமொருவன் தானென்று..

அந்தோ பரிதாபம் அவன் நிலையது  மோசமாம்  கலங்கியதும் நானே....

கண்ணீரில் மூழ்கி தன்  ஜீவன் அவனடக்கும்  வழியை யான் அறியேன் அதற்கு முதல்...

உண்மைதான் சொல்கின்றேன் நீவிரும் உணரலாம் உம் மனதில் சோகமதை  கண்டால்...

சோகமது கூடவோ அவனையே நினைத்தேன்  அவனுயிரும்  பிரிந்த பிறகு...

என் கண்தானா  கண்டது என்று மட்டும் அனுதாபமாம்  அவன் மேலே...

என் சோகமிங்கு  குறைவுதான் அவனை விட என் மனதிலன்ரோ ...

  அதுபோதும் எனக்கு  என் சோகம் நான் தீர்க்க  இன்றுமட்டும்   ..

மறுபடியும் வருந்தினேன் அவன் நிலைமைதான் என்ன என்றெண்ணி   ...

சந்தேகம் தான் என் நினைவில் கபட நடிகன் அவனும் அன்றோ...

காத்திருக்கிறேன் நாளை கூட அவன் நல் வருகைக்காக மானிடனாய் .....


மங்கையவள் கூந்தலில் இவ்வளவு மாயமோ எப்படி மறப்பேனதை என் மனதில்...

இன்னும் தான் தோன்றுது மறுபடியும் இன்று அதை காணத்தான் வேறு எதை...

எப்படி சொல்வேன் அதை என் வாயால் சொல்லமுடியும் இக்கவியால் தானிங்கு....

நீரோடைதான் அவள் கூந்தலேன்று நினைவிருக்கும் என் மனதில் என்றுமது ..

எண்ணினேன் நானுமதை அளக்கதான் அன்று முடியவில்லை இன்று   மட்டும் ...

என்னவொரு நீளமது நைல் நதியோ தான் அதுவோ கேட்கிறது என் உளறல் உள்ளம்...

தாமரையின் வாசமது ஓடையில் தான் மட்டுமோ இவள் கூந்தலிலும் தான்-
உணர்ந்தேன் அதை விட அதிகமாக...

வளைந்து செல்லும் நீர் பாதையை இங்கும்  கண்டேன்  இவளது நீள் கூந்தல் தான் அதுவோ ...

தண்ணீரின் தெளிவது கண்டேன் அவள் முடியும் கூந்தல் அழகதில் தான்
வேறெங்கே காணமுடியும் என் மனகண்ணாலே  .....

வற்றாத ஓடைதான் கண்டேன் என் மனதில் வற்றாதது அக் கூந்தலின் வன்மை அன்றோ ...

படகு விடவா எனத்தோன்றியது என் எண்ணம் அது முடியாது நீரில்லாமல் உணர்தேன் நாவில் அக்கணமே..

என்னவோ தெரியவில்லை ஒரு விதத்தில் கவலை தான் எனக்குமன்று என் மனம் உணர மறுக்குது இன்றுமதை ...

இருட்டளவு நிறமது கண்டேன் அவள் தம் கூந்தலை
இருட்டினில் காணவில்லையே என்று நொந்தேன் என் மனதில்...

அதுகூட இறை படைப்பு தான் போல என்று கூட எண்ணியது என்னுள்ளம் இன்று மட்டும்...

ஓடை பயணம் வேண்டாம் இருட்டினில் என்றெண்ணி அவன் செயல் தானோ
அதுதான் புரியவிலை இன்றும் கூட ..

ஓடை எல்லை தேடுகிறேன் நான்கூட அவள் முகம் காணும் ஆர்வத்தில் தான் அடங்காமலே ...









சொல்லாத சோகங்கள்  நிலைத்திருக்கும்  காலங்கள் 
 என்றென்றும் உம் வாழ்வில் ..

நின்றறிவீர் நீர் கூட சில காலம் செல்லுமத்துக்கு..

வற்றாத குளங்களாகி அணையாத நெருப்பாகி நிலைத்திருக்கும் உம் நினைவில் கஷ்டம் தாம் உமக்கது ..

மறப்பதுதான் நிஜமென்று உணர்வீர் உம்மனத்தில் அன்று.

மறைந்திருக்கும் நிஜம் கூட வெளிச்செல்லும் உம் முன்னே..

மறையாத துயரங்கள் பயந்தோடும் உம் பின்னே...

தைரியம்தான் பதில் சொல்லும் இதையெல்லாம் நீர் கடக்க ..

உம்மாலும் முடியும் அதை இன்றே வளர்க்க...