ஓராண்டு பயணத்தில் ஒரமாய் நானிருந்து ஒட்டு கேட்ட வேற்றுமைகள் இனியும் ஓய்வாகும் தானோ..
ஆண்டாண்டு காலத்தில் எனை அடித்த மனவலைகள் அநீதியினை மட்டும்தான் ஓயா  ஓசையாய்  இனியும் தருமோ-இனியும்,
கண்முன் மாண்டாரை நினைப்பதில்லை -மதிகெட்டோர் தேவையில்லை ,என்று  என் மனம் நீதி சொல்லிய பின்னும்  மரணம் தான் என் வாழ்வோ..
வீண் ஆனா இவ்வாழ்வில் விலைமதிப்பை தேடியவன்- நானும் விரல் நுனியில் எனை வெறுத்தேன் ,இதுவும் என்  வீண் செய்கை தானோ..




ஆனாலும் நான் இன்று அறையுயிராய் இருக்கிறேன் - அவ்வுயிர் மட்டும் என் சொத்தாம் அறிவீரோ நீரோ..
எந்தன் காணாதா மறு ஜென்மம் கணிப்பதத்காய்  சோதிடர்கள் -சாதக எண் ஒழுங்கை மறக்கிறாரே ,அதுவும் எந்தன் இயல்பினாலே  தானோ..
கோணியதாய் என்வாழ்வு என் கொள்கையினால் மனம் தாழ்வு -அதனால் தாண்டவமும்  ஆடுகிறேன் நன்றாய்  தரம் பாரும் நீரோ..
எனவே -ஆண்டவனை நாடுகிறேன்  , எந்தன் அரையுயிரை போக்குகிறேன் ,அதற்கு  அனுமதியை தருவக்கு எந்தன் உடல்  அனுமதிக்கும் தானோ!!


தமிழனில் தரம் காணும் தவறான உலகமடா..
நீயும் தரமின்றி  போகாதே உனக்கிதுவோர்  தரமான சொல்சாவியடா..
உன்னையின்று  சாவடிக்கும் உளறுமனதில் எங்கே நீதி ஆளுமடா..
மதிக்காதே  மிதியவரை நீயும் மதி கொண்ட தமிழ் ஆவியடா..



தமிழ் சரித்திரத்தின் சறுக்கலில்  சயனம் கொண்ட அவை  பாவியடா...
நாமுமிதை பயமற்று கூறலாமே  புதுப்  பணி செய்யும் நாம்  அப்பாவியடா..
உலகத்தின் மாற்றத்தால் அவர் தவறும்  மாறுமாடா ...
உந்தன் பொய்யுரையோ மெய்யுரையோ  எங்கு பொருளின்றி போகுமடா.. 
பொறுத்துகொள் நீஎன்றோ  மெய்பொருள் சொல்வாய் ஒரு காலமடா..
  
  


உணர்வுள்ளோர் கூறட்டும் உருப்படியாய்  ஏதும் ஆகுமாடா ...
உணர்விருந்தால் நீயுமின்று உலகை உருட்டிதான் பாருவடா...
வதை கண்டு சிதைப்பட்ட வலியுனக்கு போதுமாடா...
கதை மட்டும் சொல்லாதே உன்னை காவியமா மாத்துவடா...


அரைநொடியில் என் வாழ்வும் அமைதிதான் போல இருக்கு...
        மறுநொடியில் எனக்குமினி மறுபிறவிக்கு தாய் இருக்கு..
கரடு முரடான கொடும் கடும் பாதை என்  கண்முன்னே  தெரியுது ,
             ஆனால்    முடிந்தவரை எனக்குமிங்கு தெளிவாய்  முழுப்பார்வை தெரியுது..
முடியாத என்வாழ்வில் முழுமைகள் தான்  எங்க இருக்கு..
                   முயலவில்லை நானுமதுக்கு முட்டாள் வேலை போல இருக்கு..
மூன்னாங்கு நிமிடத்துக்கு  என் மூச்சு காற்று அளவாய்  இருக்கு...
                    ஆனாலும் நான் அதனை உடன்முடிப்பேன்   போல இருக்கு...
உணர்வெல்லாம் போகுது, எந்தன் உடல் உண்மையாவே சாகுது..
                 அரைநொடியில் என் வாழ்வும் அதனால்  அமைதிதான் போல இருக்கு..


அறிவுள்ளோர் கூறுவீர் மறு பிறவி இனி எதுக்கெனக்கு,
                 இப்பிறப்பில் என்   இருதயமும் இறுகுது-அதனால்  இயலாமலே எனக்கிருக்கு..
கால் கை எங்கெல்லாம் மரக் கட்டை போல இருக்கு..
                 மரணித்த என் உடலுக்கு தீமூட்ட  அதுதான் முழுப்பொறுப்பு..
மூன்றேகால் நொடிதானாம் என் மூளையும் சொல்லி தருமாம்..
               முயலாதாம் அதுவுமினி முன்னாணும் செயலில்லையே...
கணமெல்லாம் முடிந்திட்டு எந்தன்  காவியமும் அழிந்திட்டு ...
                   பாவியவன் எனக்கிங்கு ஏன் எதுக்கு மறுபிறப்பு...


மனிதத்தின் தத்துவங்கள்...
அவை புனித்தத்தின் குறள் நெடில்கள்

மாறிவிட்ட மன இயல்புகள்.........
அம் மாற்றத்தின் செயல் குணங்கள்.....

புதுவாழ்வின் புது இடர்கள்....
இடராலே மன புதர்கள்..

நிலையற்ற கண நிம்மதிகள்..
அவை நீண்டகால கால் புள்ளிகள் ...

தளராத சிலை நெஞ்சம்....
தவிக்காத தனி கலை நெஞ்சம் ...

புயல் போன்ற செயல் பலங்கள்...
அதில் புதுமையின் நினைவலைகள்...

விழியில் காணாத மணவாழ்வு..
அதனால் கணிக்காத கணநிமிடம்...

இன்றும் இரவினில் சோதிப்பு..
அதனால் இருட்டெல்லாம் பாதிப்பு ...

மலை போன்ற சிலர் மனது...
அவை மறைவான புது உலகு...

நிறுத்தாமல் புவி சுழற்சி ...
அதில் வெறுப்பாயே எம் வாழ்வு...

வாழ்வில் நிறுத்தாத கை வரிகள்..
நொடியும் எம் பிறப்பதனை சிறப்பாக்கும்...


உன் அன்பினது ஈரம்  காயவில்லையென்று    எந்தன் ஆறுதல் எனக்கு சொல்கிறது..  


உன்  நட்பினது நன்மை பிறர்க்கு புரியவில்லையென்று  எம் பிரிவின்று பிதற்றுகிறது..


உன் சொற்கள் தான் மகிழ்வெனக்கென்று   என் சோகமின்று  இசைக்கிறது..  


உன் நிழல் போன்ற நட்பு  எங்கேயென்று என் நிழலின்று  யெனை  தொடர மறுக்கிறது..  


உன் கலையழகில் கவி சொல்லும் மெய்யான என்நாவும் இன்றோ சுவையின்றி  விறைகின்றது...  


உன் நிலையழகை  நிறுத்தாமல் கவிபுனையும் கைவிரலும் என் கையெழுத்தை மறக்கிறது..  


உன் கடல்நீல கருவிழிகள் என் மனக்கரை காண ஏங்கவில்லையென்று என் எண்ணவலையோசை  அலைகிறது..  


உன் சிரிப்பினது வெள்ளொளி  சிதறல்கள் விளங்கவில்லையென்று பிணைவான என் கண்ணிமைகள்  தமைபிரிய நினைக்கிறது.. 


உன் சிறுபிள்ளைத்தனத்தின் மனச்சிதையாமை எங்கென்று சிதறிய என் நெஞ்சின்  சிலதுகள்கள் அழுகிறது..  


என்  வருங்கால வாழ்விலுன்னை  வலைப்பூவில் காணுவாயென்று   கதறிய என்னிதயம் உதிரக்கவிபுனைய  வினைகிறது..  


என் மன வானத்தின் கூரையில் வரையறைடின்றி பறந்து விரிந்த உன் மனமேகம் எம்மை அலசும் காலத்தின் கோலத்தால் மட்டுமின்றி உன் அன்பெனும் மழை என்னில் பொழிந்து அதனால்  ஈரமான என்  மனதில் இருட்டெல்லாம் மறைவாக்க திடீரென மின்னலாகி வந்த உன்  மன உரசல்களால் தாக்கமாகிய என் இதயத்துக்கு இடிபோல அதுவும்   இடித்து உன்  நினைவெல்லாம் என்னிலின்று சிதறிப்போக என் நினைவையே இழந்த நிறையற்ற என் நினைவுகள் உனக்காக  வெள்ளமாகி ஒன்றாகும் உந்தன்  அதே அன்பெனும்  மழையினாலே.....

மறைவாகி என் மனதை மயக்கியதும் நீயே..

மழை போன்ற உன் அன்பால் நனைந்தவனும் நானே...

என்றும் விலையில்லா வினையில்லா நீயே  என் வாழ்வே...

உன்னில் நிலைத்தவனும் உன்னை நினைத்தவனும் மறைவான  நான் தானே!!..





கடல் போன்ற உன் எண்ணவெள்ளம் கரைபுரளும் என்னில்  நாளும்....

வரையறையில்லா என் மன வயலெல்லாம்  உன் வாழ்வரம்பாலே உள்ளில்  சூழும்...

உன்னால் மின்னலாகி என்னில் உரசிய மின் தாக்கம் என்னிலினியும்   வாழும் ..

நானும் மிரளாமல் மனம் சிதறாமல் மீட்டெடுப்பேன், உன்னை இனி என் மனம் ஆளும்...


உன் கண்களில் அமைதி கண்டேன்,
       காரணம் அறிய வந்தேன்,
             பெண்களில் உன்னிடமே நானும் பேராண்மை காண வந்தேன்..


சிந்தனை இன்றிழந்தேன்,
     உன்னில் சிற்பமாய் நானிருந்தேன் ,
           என் கண்களில் ஈரம் இன்றோ  காரணம் சொல்லடியோ..


உன் பொறுமையில் பெருமை கண்டேன்,
       பொறாமையில் நானும்  அலைந்தேன்,
               உன்னில் வெறுமையில் வந்தவனேன்னை விரட்டாதே கண்மணியே..


உன்னில் வீணான என் நினைவில் வினை உனக்கு இருக்கடியோ ,
          என்றும் விரும்பாத என் நினைவை வெறுக்காதே மலர்விழியே..


தாமாக எனையிழந்தேன்,
     உன்னில் தாராளம் தவள கண்டேன்,
           இன்றோ வாழ்வென்னும் சாவினிலே வரம்பொன்றில் நானலர்ந்தேன்..


சோகமா உனை விரட்டும்! சொல்லடி நீயின்றே ..
        உன்னை சோத்தித்து பார்க்கையில் நான் சோதனை அதை மறப்பேன்.. 


உன் அன்பினது ஈரம்  காயவில்லையென்று    எந்தன் ஆறுதல் எனக்கு சொல்கிறது..  


உன்  நட்பினது நன்மை பிறர்க்கு புரியவில்லையென்று  எம் பிரிவின்று பிதற்றுகிறது..


உன் சொற்கள் தான் மகிழ்வெனக்கென்று   என் சோகமின்று  இசைக்கிறது..  


உன் நிழல் போன்ற நட்பு  எங்கேயென்று என் நிழலின்று  யெனை  தொடர மறுக்கிறது..  


உன் கலையழகில் கவி சொல்லும் மெய்யான என்நாவும் இன்றோ சுவையின்றி  விறைகின்றது...  


உன் நிலையழகை  நிறுத்தாமல் கவிபுனையும் கைவிரலும் என் கையெழுத்தை மறக்கிறது..  


உன் கடல்நீல கருவிழிகள் என் மனக்கரை காண ஏங்கவில்லையென்று என் எண்ணவலையோசை  அலைகிறது..  


உன் சிரிப்பினது வெள்ளொளி  சிதறல்கள் விளங்கவில்லையென்று பிணைவான என் கண்ணிமைகள் தமைபிரிய நினைக்கிறது.. 


உன் சிறுபிள்ளைத்தனத்தின் மனச்சிதையாமை எங்கென்று சிதறிய என் நெஞ்சின்  சிலதுகள்கள் அழுகிறது..  


என்  வருங்கால வாழ்விலுன்னை  வலைப்பூவில் காணுவாயென்று   கதறிய என்னிதயம் உதிரக்கவிபுனைய  வினைகிறது..