உலகமெங்கும் உறைந்திருந்து உண்மையிலே நனைந்திருந்து
உயர்வாக இருந்த நீதாண்டா தன்மான தமிழா!
உள் வேதனையை சொல்வாயோ
இல்லை உன்மனதால் சாதனைதான் படைப்பாயோ.
சரித்திரத்தில் நீயும் நன்கு சறுக்காமல் பதிந்தாயே..

கொதிதெளும் உதிரமும் கொல்லாத பார்வையும்
தனிப்பெரும் சொந்தமாகி உன்னுடனே பிறந்ததே.
உன்மேலும் கொட்டாத மழையென்ன
உன்முன்னும் போகாத உயிரென்ன ..
வெறுத்திட்டாய் வாழ்வதனை அதன் விலைமதிப்பை உணராமலே..

புரட்சியது உன் திறமை சனிபெயர்ச்சி கூட உன் பகைமை
சாத்திரமும் கணித்தாயே இன்று சாகவும் துணிந்தாயே..
வீரம்தான் உன்மனது மனகாரமது தெரியும் உன் செயலில்
சிலைக்குறிப்பாய் செதுக்கலாமே உன் சிறப்பான வாழ்வதனை..

கண்களால் கதைத்தாயே மனதாலே வாழ்ந்தாயே
சரித்திரத்தில் இடம்பிடிக்க தசாப்த சாதனையை புரிந்தாயே.
சட்டங்களை போட்டவனே சாவகாசமாய் அதுள் நுழைந்தவன் நீ
திட்டங்களும் வகுத்து முழுத் திருப்தியாய் இருந்தாயே..
சொந்தங்களை இழந்தாயே சோகங்களை கொண்டாயே
சொல்லவும் முடியாமல் வாய்மூடி மௌனியாய்தான் போனாயே.

தமிழ்மொழிதான் உன்தாயாம் பொய்யாமொழியது உன் படிப்பாம்
மெய்யாலே தோற்றாலும் தமிழா நீ மெய் மறக்காய் உன் நிலையை..
வெளியூரில் சிலர் சிணுங்கல் உள்ஊரில் பலர் முணுங்கல்
உலகமே அன்றொருநாள் உந்துணிவால் ஒன்றும்தன் குரலால் உளராமல் போனதே.

உரிமைக்காய் உயிர்ப்பிணையாம்
சொந்தமண்ணுக்காய்உன் உடலாம்
என்னென்று உருவெடுத்து வந்தாயே
நிலைமாறி இன்று உருக்குலைந்து போனாயே

அநீதியை வெறுத்தவன் நீ அகம்பாவம் பொறுத்தவன் நீ
அஞ்சாத ஜீவனாக அன்றோர் தமிழன்னை மடியில் உதித்தாயே .
சினம் கொண்டால் சிறுத்தையவன் நீ
மனம் கொண்டால் மாரீசன் நீ
மறையோனும் உன்னிடத்தில் தயங்காமல் மடிப்பிச்சை எடுப்பானினி.
தொலைதுறைகள் துளைத்தவன் நீ
வதைச்சிறைகளில் சிதைந்தவன் நீ
அரையுயிராய் இருந்தாலும் மானத்தமிழனாயே மாறாமலே இருந்திட்டாய்..

மனத்துரோகிகளும் உன்னிடத்தில்
மானமிழந்தவனும் உன்னருகில்
மயங்காமல் இருந்திட்டால் இனிநீயும் மாமனிதன் தானன்றோ..
தடைகளும் மாயகுடைகளும் தவிடுபொடிதான் இனியுனக்கு
கணநொடியில் உடைத்தெறிவாய் என்றும் நீ தலைநிமிர்ந்து நடந்திடுவாய்..

வளமான வாழ்விடத்தை வாய்திறந்து கேட்டவனே
வழியெங்கும் விழிதிறந்து விரதமும் பிடித்தவனே
அதற்காகதானின்றும் அடங்கா தமிழனாய் நிலைத்தாயே..
எழுபிறப்பில் உதித்தாலும் உன் பெயரென்றும் நாட்குறிப்பில் எழுதப்படும் இச்சிறுகுறிப்பாய் சொல்கின்றேன் இனியும் நீ சிதறலாகி போகாதே.