சங்கடத்தில் சங்கமித்தமனம் சாலையோர சாதியானதொரு நாளை என் சிறு நாட்காட்டியும் குறிகாட்டும் இன்றும் என்றும்..
துக்கத்தின் திரட்டல்களால் தூரப்போனேன் நானும் நிம்மதியின் தூதுவரே இல்லாமல் தனித்திருந்த அந்நாளில் .....

சத்தியமும் சோதனையின் சூட்சுமமும் வெட்டவெளிதான் என் மனக்கண்ணினிலே...

நேர்மையின் பத்தியமும் துணிச்சலின் திறனும் மங்கா மனவொளிதான் என் நிஜகண் முன்னினிலே...

தெருவோர சத்தங்களும் வெறிபோன்ற துக்கபுயலும் ஒரே சூறைதான் சின்னவென்னுடலை...

சாதிமத பேதமின்றி சகலர்க்கும் அர்ப்பணமான கால்தூசியதன் கலங்கள் தூறல்களுமங்கு குழப்படியாம் என்னில் விடாமலே..
வாய் மூடி நானிருந்தேனன்று சூரியச்சகா வெயில் வாட்டல்களால் நா கூட வரண்டது நானும் அறியாமல்..

கல்லூரி ஆண்களும் மனதை களவெடுக்கும் பெண்களும் கண்கொள்ளா காட்சியாகியதன் களிப்புத்தான் அன்று முழுதும் கலங்காமல் நானிருக்க...

சூது இல்லா குழந்தைகளும் சாதுவான தாய்மாரும் சோடியாக போயினரே சொல்ல வார்த்தை வேறெதுவுமில்லை..
சில்லுருளும் வண்டிகளும் சொல் வசை பேசும் அதன் இசையும் சங்கடத்தை பெருக்கியதே அதனால் மனசக்தியை முழுதும் இழந்தேனே...

நடைபாதை தடத்தினில் நடக்காமல் இருந்தவேன்னை நடவென்றார் சிலரன்று நானறியா நயவஞ்சக சொற்களினால்..

சிலகாலம் இருப்பேன் என்றேன் என் மனது சிதையாமல் இருக்கட்டும் என்றேன் சிரிப்பாலே சிதைத்தாரவர் சினம் கொண்ட அவர் பார்வையினாலே..

சத்திரமும் அதுவில்லை என் பாத்திரமும் அன்று சரியில்லை .நிற்பதுவா நடப்பதுவா என்ற நிலை எனக்கு புரியவில்லை ..நிலையில்லா ஆளாகி தனித்திருந்தேன் நானும் அச்சாலையோரத்திலே...