ஓய்ந்திருந்து ஓயாமல் அழுது
ஒளிவாயே இருந்திட்டாய் நீ..
ஓலமாய் கூவினோரும் ஒய்யாரமாய்
போயினரே .. நீ வருவாயே
என்றெல்லா விழி திறந்து
காத்திருந்தேன் நிஜமாவே..


முப்பதின் தசாப்தமாய்
முடிநரைத்து நீ இருந்தாய் ..
முந்நான்கு மாதமதில்
மறுபிறவியதனை எடுத்தாய்..
முழங்காமல் இடித்துவிடு தமிழனவன்
வேதனையின் சோதனையை..
உன்னாலே நடக்குமென்று
நாடொறும் கனாதேவிக்கும் தொல்லைதான் ...

சொந்தமாய்தான் இருந்தோம் சொல்லாமலே பிரிந்தோம் ..
எம் நாட்டில் உண்மையதில் பொய்யிருக்கும்
உன் எஜமான் இன்று யாரோ!

கரும்புகையை கசிந்து விட்டாய்
நிலக்கரியை விடாமல் தின்றாய்..
நிறுத்தாமல் புகைத்ததாலோ எஞ்சின்
புற்றுநோயும் வந்ததோடி உனக்கு..
புகைக்காதே உனக்காக நிலஎண்ணையும்
இருக்குதடி உன் உடலில் உறிஞ்சி
கொள்ளு நீ நிறுத்தாமலே..எதிர்காலம்
உனக்கினி நன்றுதான் எதிர்திடுவாய் வரும்
நஷ்டமதையும் ஓடி நீயே விலத்திடுவாய்..

தென்னிலங்கை மீன்களும்
வடவிலங்கை சுறாக்களும் நாடெங்கும்
யாழ் மீட்டி இசைபாட யாழ்தேவியாய்
ஊர்ந்து வருவாயோ ..தேவதையாய்
பூமிதேரில் ஏறி என் கண்முன்னால்
நகர்ந்துடுவாய்..காவியமும் எழுதலாமடி
உன் இறந்த கதையை கேட்டு ...
இறக்கவில்லை நீ கூட எம்
மனதில் நிலைதிருந்தாய் மறையாமலே..

வசைபாடும் மானிடனும்
வாஞ்சையில்லா மாமனிதனும்
வாய்திறந்து இசைமீட்க யாழ்மண்ணதில்
புரள்வாயோ ...உலகெமெல்லாம்
தமிழினத்தின் உண்மையதை
சொல்வாயோ..நடத்துகின்ற
புரட்சிகளால் இனியும் நீ மடிவாயோ.!

தெருக்களையும் கடந்து சென்றாய் ..
எம் பாத செருப்பதனை ஏற்றி செல்வாய்..
ஈழவரின் சேவகனாய் தலைநிமிர்ந்து
வாவேனின்று ..
காணவில்லை நேரெதிரே
மறைந்திருந்தாய் ஒரு புதிராய்
மாயவனும் விலகி சென்றான்
மறைவாக இருக்கலாமோ..

மந்திரமும் எம்மவர்க்கில்லை
உன் உடல் எந்திரமும் எம் சொந்தமில்லை ..
வேதனையை தந்தவள் நீ துயில்
சோம்பலாயே இருக்கிறாயே..

இடைவிடாமல் துடிக்கும் தன்
இருதயமும் ஒலியெழுப்பும் உன்
ஒலியதனை எதிர்பார்த்தே..
நாம் காணாமல் கருத்து
சொல்வதை புதுக்காவியமாய் படைப்பாயோ..


ரகசியமாய் ஒன்று கண்டோம்
நாமங்கு முக புத்தகத்தினில் அவள்
உள் முகமறியாமலே...
பார்த்ததுமில்லை கதைத்ததுமில்லை
பயம் தான் சற்றே அன்று
எம்முடனும் அவளுக்கன்று..

ஓரிரு வார்த்தைகளாம்
வருடாத பேச்சுகளாம்
புரிந்தது அவளுள்ளம் அன்றே
நன்கு...

இறைவனுக்கும் பரிசுதான்
அதுபோன்ற நண்பியார் எம்முடனே
ஒருத்தியன்றோ..

அடக்கமும் பணிவுமாம் அவள் கரங்கள்
அடக்கவந்தாள் அடங்கா ஜீவன்களை
வீரமது வனிதையாக..
கனாகூட அன்று காணவில்லை -
நாமும் கண்டோம் இன்று கனா காணும்
காலங்களில் அவள் ராகவியின் பிரதியன்றோ..

நட்பென்றால் ரசிகையாம்
அவளோ நட்புக்கோர் இலக்கணமும்
எழுதியே உள்ளாள் ..
அறிவுரைகளாம் பலதந்து
ரகசியமாய் ரசித்த அவளும்
ஒரு ரசிகையன்றோ..

பேச்சிலும் குழந்தைத்தனமாம்
அவள் இன்னும் குழந்தைதான் என்பதை
நண்பர் நாமறிவோம்...
யார் சொல்வார் இதையெல்லாம்
நாமறிவோம் நன்கே சொல்வோம்
இக்கவியாலே..

சேயுள்ளம் தான் இவளுக்கும்
தன்  தாயதன் பாச முடிச்சை
அவிழ்க்காமலே இருப்பாள் என்றென்றும்..

பிறருதவி தான் செய்வாள்
தன் கருமம் போலெண்ணி
தன்னினிய நட்புகனிக்க..

சொந்தமென்றால் சோகமாம்
இவள் வாழ்வில் சொல்லிவைத்த
வடுக்களாம் இவள் மனதில்...
கவலையில்லையாம் இனியங்கு
நண்பர்களால் மறந்தாளோ புரியவில்லை
இன்னும் எமக்கு ..

சிறு பிரிவொன்று வந்ததாம்
அவளுடனே அன்று பிரியவில்லை
நாம் கூட எம் பிரியா நண்பி அவளன்றோ..
எம் மனதில் சத்தியம் தான்
இங்கு கூட சாத்தியத்துக்கே இடமில்லையாம்...

பாசத்துடன் கதை பேசும்
பண்புடனே புன்சிரிக்கும் அவள்
முகமதுவும் நிலவதன் முகமன்றோ..

சொல்வதும் நாம் தான் ஏற்கமாட்டாள்
இதை என்றும் தன் அடக்கத்தினாலோ
நாமறியோம் ..

கல்விதான் அவள் இலக்காம்
அவள் கூட எம் போன்ற ஜீவனன்றோ...
எம் கொள்கை தான் அங்கு கூட சிறகடிக்கும்
விட்டிலாய் உலாவுது அவள் மனதினிலே..

எம் குழப்பம் தீர்க்கவந்தாள் எம்செல்ல
குறும்புகளையும் போக்க வந்தாள்..
உணவதையும் தன் தொல்லை என்பாள்
அவள் உண்ணுவதும் இனிமை தானோ..

நண்பரவர் நாமொழி கேட்பாள்
நட்பினிலே  நாடகம் அங்குமில்லையாம் ....
குறும்பு மனமது தானங்கே அவளுமங்கு
எம்மவர்களில் ஒருத்தியன்றோ..

தாயவளை தெய்வம் என்பாள்
அவள் தாய் கூட எப்பிறப்பிலும்
தெய்வம் அன்றோ...
நல்லண்ணன் உள்ளானாம்
நாலதுவும் அறிவானாம்
இவளுமத்தை புரியாளாம் சேய்தானே
இவளென்றும்..    


பிரச்சினைகள் தான் அவள் சூழலில்
பிரயோஜனமில்லையாம்
அது தெரியும் எமக்கு என்றும் ..
தெரிந்ததும் அவளுக்கும் கணக்கில்லைதான்
போகட்டும் என அவள் உள்மனம் வெறுத்து ..

உலகதன் முடிவரையும் உலவும்
ஜீவன்களில் ஒரு ஜீவனன்றோ இவள் கூட..
உலவிடுமாம் எம்முடனே எம்
நண்பியாக என்றும் பாசத்துடனே..
கவலைதான் அன்று எமக்கு சகோதரி
தானில்லை எம்முடனேஎன்று..
தீர்த்ததில் இவள் கூட எம் வாழ்வில்
மறையா ஒளியாக உதித்தாளோ ...


என் மனதை தைத்தவள்
நீ தையல் தேவதையே..
மனசை கிழித்ததும் நீயடி அதை
வருடி துவைத்ததும்  நீயடி..

தாராளமாய் வந்தவளே
பசும் தாமரையாய் இருந்தவளே
ஆதவனாய் இருந்து ரசிக்கின்றேன்
கணப்பொழுதும் மலர்வாயா
கண்களால் காணவில்லையடி
மனக்கன்னதுவும் திறந்தேனடி
உன் உருவம் காணவே என்னையும்
 நான் அறியேனடி..

எண்ணித்தான் வியந்தேனடி
உலகளவில் மலர்ந்தேனடி
புது மலராம் ரோஜாவாக புவனியிலே
உன் பவனியதை கண்டேனடி..

உன்னுடன் சொட்டுத்தேன்
களித்தனடி மனதளவில் சொக்கித்தான்
போனனடி சொல்லெதுவும்
என் வாயில் இல்லையே
சொல்லாமல் போட்டேனடி ..

காற்றதுவில் கலந்தவளே
மூச்சுக்காற்றாகி வந்தவளே
மூச்சுமடி திணறுதடி உன் மன
முக்காடும் விலத்திகாட்டடி..

முதுகெலும்பாய் இருந்தவளே
என்னுள்  முண்ணானாய் பிணைந்தவளே
உன்னை முட்டித்தான் பார்க்கிறேன்
என் மனம் முரடு தானடி..

கோவையாய் இருந்தவளே 
என்மன பூட்டையும் திறந்தவளே
நீ கோபித்தாலும் குறை சொல்லேன்
உன்மன சாந்தமும் நானடியோ.
இராகனவிலே சென்றவள் நீ
பட்டப்பகல் தனில் வந்தவள் நீ
என் மனதை ஒளியாகிதான் போனாய்
இரவதும் நான் தொலைத்தேனடி..

சோதனையை தந்தவள்
நீ மனதை சோதித்து பார்த்தாயடியே
சோகமாய்தான் நானடி மன
சோதிடனாய் இங்கு வாவடி..
மனதாலே கூப்பிட்டேன் மனதளவில்
இராக்கனவாக வந்தாய் நிஜமாக
அழைக்கிறேன்..
நிழல்போல தொடர்வாயா ...


நட்பெனும் கடலில் இணைந்தோம்
அன்று அலையாகி சென்றது அதுவும் இன்று....
கண்ணீரும் கலந்தது உண்மைதான்
அவ்வலையோடு சென்றதும் பொய்யாகுமோ!!

நட்புக்கோர் இலக்கணம் தேட
சென்றோம் நாமே -விடைகூட
கிடைத்தது விரக்தியில் இன்று..
கல்லூரி காலமதில் கண்டதோர் பிரிவு
இணைய வழியதனில் இன்னுமோர்
இணையா பிரிவு..

நினைக்கவில்லை ஒருபோதும் நடக்குமென்று
நடந்ததும் பிறர் நினைதாட் போலவே நன்று...

என் விழிகள் அழுவதும் கண்ணீரால்
தான் அன்றி உதிரமும் கூட வழியுது என்
முகத்தினிலே ...
நீர் அறிவீர்-மனமதும் சொரிகிறது
தன் கண்நீரதனை என்றும் வற்றா
என் மன அருவிக்கு தானோ ...

பிரிவதன் வலியும் தாயதன் சேய்ப்பிரிவும்
இணையென நினைத்தும் என் மனம்தான் இன்று...
உணர்கிறேன் அதை நன்கே என் மனமும்
சேய் தானோ புரியவில்லை எனக்கு...

என் பிரிந்தோர் பலர் உளர் என்மனமதை
புரிந்தோரும் சிலர் உளர்..
புரியாதோர் கூட புரிவீர் இதன் கொடுமையை
தம் மனதில் வெளிச்சமாகவே...

மனமெனும் பூவில் மணமது இல்லையாம் -இது
தோன்றியதும் இன்று தானோ என் மனதில் ..
மலரின் மணமது உணராத தனி மரமாகி நிற்பேனோ!
என் தைரியமோ வினவுகிறது இன்றென்னை..

நட்பதன் பிரிவை தாங்காத
என்னுள்ளம் நட்பதன் பெருமை
உணருமோ இனிக்காலத்தினில்...

கடலதில் கரைக்கின்றேன் நட்பெனும்
அஸ்தியை என் மனக்கண்ணீருடன்
சேர்த்தே இன்று ...

உடன் பிறந்தார் போல் பழகி
நாமெல்லாம் உலகத்தை
உணருவோம் இனிமேலே..
ஒரு தாய் பிள்ளை தான் நாமெல்லாம்
இப்புவியதன் கால சக்கரத்தினில் அன்றோ...