காலத்தின் பிடியில் இன்று  காரணமின்றி என்னில் ஓலத்தின் துளியதையே ஒன்றாயிங்கு  காணுறேன்..
 

ஞாலத்தின் பாலத்தில்  நான் நடந்த கணங்களிலே மன கோலத்தில் மெய்யன்பும் குற்றுயிர்தான் சொல்லுகிறேன் ..
 

சாத்திரத்தின் சருகுகள் என் ஆத்திரத்தின் அமைவுக்கு ஆணியொன்றாய்  ஊன்றியதை  ஆறாமல் உணருகிறேன்..
 

மன பாத்திரத்தின் நடத்தையில் பொய்த்தரித்திரங்கள்  தறைவினால் வேண்டாமிந்த வாழ்வென்று வெறுத்துத்தான்  கூறுறேன்...

 


சிக்கிய துன்பத்தில் சிதறாமல் இருந்தவென்னை நித்திய வேதனைக்கு நிறுத்தாமல் நடத்துவோரும்,
 

மக்கிய இன்பத்தை மறைவாயே காட்டிஎன்னில் நக்கிய தேன்போலே நா நனைய 
வைப்போரும்,
 

சத்திய வாழ்விலேன்னை சரம் தொடுத்த சிலபேரை சாத்திய கேள்விகளால் தரம் காண வைத்தோரும்,
 

அவர்புத்தியே மழுங்கியினி புதுவாழ்வில் சறுக்கினாலோ   நித்தமும் எனக்குமினி   நெகிள்வாயே இருக்கும் தானே  ..

 


நாளையின் காலத்தில் எனை அணுகும் மனஆலத்தில் சோகமும் சோதனையும் சொல்லாமல் போகட்டும்..
 

மரித்த என் காலத்தில் மறைந்திருந்த வேதனைகள் என் சிரித்த தவப்பொழுதினிலே சிதறித்தான் 
சாகட்டும்..
 

வெறித்தபேய்  வெருட்டல்கள், வேண்டாத வம்புகள் ,அவை தரித்திருந்த ஆட்களுடன்   தரம் கெட்டு வீழட்டும்..
 

களைத்த என்கவியில் கரைச்சல்கள் இருப்பதனால் திகைத்த வாசகர்கள் கலங்காமல் இருக்கட்டும்..
 

அணைத்த அன்பொன்றால் எனக்களித்த நனிப்பொளுதில் நிலைத்த ஆனந்தம் நெடும்காலம் வாழட்டும்... 

 


மனமென்னும் மாயமதில் உன் சாயம் கலக்குதடி..

மரித்திருந்தருந்த செல்களெல்லாம் மறுவுயிரை எடுக்குதடி..

என் நினைவெல்லாம் உன்னோடு உல்லாசம் போகுதடி..

உளறவில்லை நானுமிதை உள் நெஞ்சம் சொல்லுதடி..

 என் உயிர் பிரிந்து உன்னோடு ஒன்றிப்பாய் சேருதடி..

உன்னால் தான் உடலின்கு உருக்குலைந்து போகுதடி..

என் நிழல்கூட என்னையின்று தொடராமல்  போகுதடி..

உன் பயண  இடமெல்லாம் என் நிழல் தேடி  தொடருதடி..

காலையிலும் மாலையிலும் காத்திருந்த கணத்திலடி..

சோலைஇளம் குருவிபோல மனம் சோதனையை இசைக்குதடி..

நீண்டகால கனவெல்லாம்  நனவாக போகுமாடி??..

நீ வந்து என்னோடு நீங்காமல் போனாலடி....