என் மனதிலும் அறியா சோகமாம் நானுமதை  நினைக்காமலே....

அமைதியே தேடி அறியாமலே   சென்றேன்   கடலதன் மடியில் உறங்க .....

இள மாலைதானோ சோகமது மறையும் எண்ணினேன் நானும் அன்று ...

செவ் ஆதவனும் பார்த்து இளித்தது என் சோகமதையும்  கண்டு...

என் கலங்கல் மனமதுவும்    மாறவில்லை அக்கணமும்  அங்கு..

என் கால்களும்  நனைந்தன இசைபாடும்   தண்ணீரால் இடைவிடாமலே....

கடலலை அதுவோ  தானென்று  என்றெண்ணினேன் அதுவும் அல்ல ..

  என் கண்ணீரும் அதுவல்ல  என்றேனக்கும்  தெரியும் நன்கே...

சூரியனை  பார்த்தேன் நானும் ஒரு விரக்தியாய் தானங்கே .. ..

 புரிந்தேன் அப்பொழுதில் நனைத்தது  அவன் கண்ணீர் தானென்று ..
 
ஜோசிக்கவில்லை நான் கூட  என் சோகம் அவனுக்குமென்று ...

என்னுள் சொல்லியது என் போன்றே அவனுமொருவன் தானென்று..

அந்தோ பரிதாபம் அவன் நிலையது  மோசமாம்  கலங்கியதும் நானே....

கண்ணீரில் மூழ்கி தன்  ஜீவன் அவனடக்கும்  வழியை யான் அறியேன் அதற்கு முதல்...

உண்மைதான் சொல்கின்றேன் நீவிரும் உணரலாம் உம் மனதில் சோகமதை  கண்டால்...

சோகமது கூடவோ அவனையே நினைத்தேன்  அவனுயிரும்  பிரிந்த பிறகு...

என் கண்தானா  கண்டது என்று மட்டும் அனுதாபமாம்  அவன் மேலே...

என் சோகமிங்கு  குறைவுதான் அவனை விட என் மனதிலன்ரோ ...

  அதுபோதும் எனக்கு  என் சோகம் நான் தீர்க்க  இன்றுமட்டும்   ..

மறுபடியும் வருந்தினேன் அவன் நிலைமைதான் என்ன என்றெண்ணி   ...

சந்தேகம் தான் என் நினைவில் கபட நடிகன் அவனும் அன்றோ...

காத்திருக்கிறேன் நாளை கூட அவன் நல் வருகைக்காக மானிடனாய் .....


மங்கையவள் கூந்தலில் இவ்வளவு மாயமோ எப்படி மறப்பேனதை என் மனதில்...

இன்னும் தான் தோன்றுது மறுபடியும் இன்று அதை காணத்தான் வேறு எதை...

எப்படி சொல்வேன் அதை என் வாயால் சொல்லமுடியும் இக்கவியால் தானிங்கு....

நீரோடைதான் அவள் கூந்தலேன்று நினைவிருக்கும் என் மனதில் என்றுமது ..

எண்ணினேன் நானுமதை அளக்கதான் அன்று முடியவில்லை இன்று   மட்டும் ...

என்னவொரு நீளமது நைல் நதியோ தான் அதுவோ கேட்கிறது என் உளறல் உள்ளம்...

தாமரையின் வாசமது ஓடையில் தான் மட்டுமோ இவள் கூந்தலிலும் தான்-
உணர்ந்தேன் அதை விட அதிகமாக...

வளைந்து செல்லும் நீர் பாதையை இங்கும்  கண்டேன்  இவளது நீள் கூந்தல் தான் அதுவோ ...

தண்ணீரின் தெளிவது கண்டேன் அவள் முடியும் கூந்தல் அழகதில் தான்
வேறெங்கே காணமுடியும் என் மனகண்ணாலே  .....

வற்றாத ஓடைதான் கண்டேன் என் மனதில் வற்றாதது அக் கூந்தலின் வன்மை அன்றோ ...

படகு விடவா எனத்தோன்றியது என் எண்ணம் அது முடியாது நீரில்லாமல் உணர்தேன் நாவில் அக்கணமே..

என்னவோ தெரியவில்லை ஒரு விதத்தில் கவலை தான் எனக்குமன்று என் மனம் உணர மறுக்குது இன்றுமதை ...

இருட்டளவு நிறமது கண்டேன் அவள் தம் கூந்தலை
இருட்டினில் காணவில்லையே என்று நொந்தேன் என் மனதில்...

அதுகூட இறை படைப்பு தான் போல என்று கூட எண்ணியது என்னுள்ளம் இன்று மட்டும்...

ஓடை பயணம் வேண்டாம் இருட்டினில் என்றெண்ணி அவன் செயல் தானோ
அதுதான் புரியவிலை இன்றும் கூட ..

ஓடை எல்லை தேடுகிறேன் நான்கூட அவள் முகம் காணும் ஆர்வத்தில் தான் அடங்காமலே ...









சொல்லாத சோகங்கள்  நிலைத்திருக்கும்  காலங்கள் 
 என்றென்றும் உம் வாழ்வில் ..

நின்றறிவீர் நீர் கூட சில காலம் செல்லுமத்துக்கு..

வற்றாத குளங்களாகி அணையாத நெருப்பாகி நிலைத்திருக்கும் உம் நினைவில் கஷ்டம் தாம் உமக்கது ..

மறப்பதுதான் நிஜமென்று உணர்வீர் உம்மனத்தில் அன்று.

மறைந்திருக்கும் நிஜம் கூட வெளிச்செல்லும் உம் முன்னே..

மறையாத துயரங்கள் பயந்தோடும் உம் பின்னே...

தைரியம்தான் பதில் சொல்லும் இதையெல்லாம் நீர் கடக்க ..

உம்மாலும் முடியும் அதை இன்றே வளர்க்க...