மங்கையவள் கூந்தலில் இவ்வளவு மாயமோ எப்படி மறப்பேனதை என் மனதில்...

இன்னும் தான் தோன்றுது மறுபடியும் இன்று அதை காணத்தான் வேறு எதை...

எப்படி சொல்வேன் அதை என் வாயால் சொல்லமுடியும் இக்கவியால் தானிங்கு....

நீரோடைதான் அவள் கூந்தலேன்று நினைவிருக்கும் என் மனதில் என்றுமது ..

எண்ணினேன் நானுமதை அளக்கதான் அன்று முடியவில்லை இன்று   மட்டும் ...

என்னவொரு நீளமது நைல் நதியோ தான் அதுவோ கேட்கிறது என் உளறல் உள்ளம்...

தாமரையின் வாசமது ஓடையில் தான் மட்டுமோ இவள் கூந்தலிலும் தான்-
உணர்ந்தேன் அதை விட அதிகமாக...

வளைந்து செல்லும் நீர் பாதையை இங்கும்  கண்டேன்  இவளது நீள் கூந்தல் தான் அதுவோ ...

தண்ணீரின் தெளிவது கண்டேன் அவள் முடியும் கூந்தல் அழகதில் தான்
வேறெங்கே காணமுடியும் என் மனகண்ணாலே  .....

வற்றாத ஓடைதான் கண்டேன் என் மனதில் வற்றாதது அக் கூந்தலின் வன்மை அன்றோ ...

படகு விடவா எனத்தோன்றியது என் எண்ணம் அது முடியாது நீரில்லாமல் உணர்தேன் நாவில் அக்கணமே..

என்னவோ தெரியவில்லை ஒரு விதத்தில் கவலை தான் எனக்குமன்று என் மனம் உணர மறுக்குது இன்றுமதை ...

இருட்டளவு நிறமது கண்டேன் அவள் தம் கூந்தலை
இருட்டினில் காணவில்லையே என்று நொந்தேன் என் மனதில்...

அதுகூட இறை படைப்பு தான் போல என்று கூட எண்ணியது என்னுள்ளம் இன்று மட்டும்...

ஓடை பயணம் வேண்டாம் இருட்டினில் என்றெண்ணி அவன் செயல் தானோ
அதுதான் புரியவிலை இன்றும் கூட ..

ஓடை எல்லை தேடுகிறேன் நான்கூட அவள் முகம் காணும் ஆர்வத்தில் தான் அடங்காமலே ...


This entry was posted on 2:58 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

    விக்னேஷ்வரி said...

    கூந்தல் வெச்சுக் கூட பாட்டெழுதலாமா...

    நல்லாருக்கு.

  1. ... on April 9, 2010 at 3:13 AM  
  2. செந்தில்குமார் said...

    அருமை....

    ஒரு கூந்தலுக்கு இவ்வளவு கோர்வையா

    தொடரட்டும் உங்கள் கனவு.....

  3. ... on April 9, 2010 at 2:04 PM  
  4. ராஜ்பிரதாப் said...

    நான் ரசிப்பவை எதுவும் என் கவிக்கே சொந்தமாகும்...

  5. ... on April 9, 2010 at 9:44 PM