என் மனதிலும் அறியா சோகமாம் நானுமதை  நினைக்காமலே....

அமைதியே தேடி அறியாமலே   சென்றேன்   கடலதன் மடியில் உறங்க .....

இள மாலைதானோ சோகமது மறையும் எண்ணினேன் நானும் அன்று ...

செவ் ஆதவனும் பார்த்து இளித்தது என் சோகமதையும்  கண்டு...

என் கலங்கல் மனமதுவும்    மாறவில்லை அக்கணமும்  அங்கு..

என் கால்களும்  நனைந்தன இசைபாடும்   தண்ணீரால் இடைவிடாமலே....

கடலலை அதுவோ  தானென்று  என்றெண்ணினேன் அதுவும் அல்ல ..

  என் கண்ணீரும் அதுவல்ல  என்றேனக்கும்  தெரியும் நன்கே...

சூரியனை  பார்த்தேன் நானும் ஒரு விரக்தியாய் தானங்கே .. ..

 புரிந்தேன் அப்பொழுதில் நனைத்தது  அவன் கண்ணீர் தானென்று ..
 
ஜோசிக்கவில்லை நான் கூட  என் சோகம் அவனுக்குமென்று ...

என்னுள் சொல்லியது என் போன்றே அவனுமொருவன் தானென்று..

அந்தோ பரிதாபம் அவன் நிலையது  மோசமாம்  கலங்கியதும் நானே....

கண்ணீரில் மூழ்கி தன்  ஜீவன் அவனடக்கும்  வழியை யான் அறியேன் அதற்கு முதல்...

உண்மைதான் சொல்கின்றேன் நீவிரும் உணரலாம் உம் மனதில் சோகமதை  கண்டால்...

சோகமது கூடவோ அவனையே நினைத்தேன்  அவனுயிரும்  பிரிந்த பிறகு...

என் கண்தானா  கண்டது என்று மட்டும் அனுதாபமாம்  அவன் மேலே...

என் சோகமிங்கு  குறைவுதான் அவனை விட என் மனதிலன்ரோ ...

  அதுபோதும் எனக்கு  என் சோகம் நான் தீர்க்க  இன்றுமட்டும்   ..

மறுபடியும் வருந்தினேன் அவன் நிலைமைதான் என்ன என்றெண்ணி   ...

சந்தேகம் தான் என் நினைவில் கபட நடிகன் அவனும் அன்றோ...

காத்திருக்கிறேன் நாளை கூட அவன் நல் வருகைக்காக மானிடனாய் .....


This entry was posted on 9:38 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: