ஓய்ந்திருந்து ஓயாமல் அழுது
ஒளிவாயே இருந்திட்டாய் நீ..
ஓலமாய் கூவினோரும் ஒய்யாரமாய்
போயினரே .. நீ வருவாயே
என்றெல்லா விழி திறந்து
காத்திருந்தேன் நிஜமாவே..


முப்பதின் தசாப்தமாய்
முடிநரைத்து நீ இருந்தாய் ..
முந்நான்கு மாதமதில்
மறுபிறவியதனை எடுத்தாய்..
முழங்காமல் இடித்துவிடு தமிழனவன்
வேதனையின் சோதனையை..
உன்னாலே நடக்குமென்று
நாடொறும் கனாதேவிக்கும் தொல்லைதான் ...

சொந்தமாய்தான் இருந்தோம் சொல்லாமலே பிரிந்தோம் ..
எம் நாட்டில் உண்மையதில் பொய்யிருக்கும்
உன் எஜமான் இன்று யாரோ!

கரும்புகையை கசிந்து விட்டாய்
நிலக்கரியை விடாமல் தின்றாய்..
நிறுத்தாமல் புகைத்ததாலோ எஞ்சின்
புற்றுநோயும் வந்ததோடி உனக்கு..
புகைக்காதே உனக்காக நிலஎண்ணையும்
இருக்குதடி உன் உடலில் உறிஞ்சி
கொள்ளு நீ நிறுத்தாமலே..எதிர்காலம்
உனக்கினி நன்றுதான் எதிர்திடுவாய் வரும்
நஷ்டமதையும் ஓடி நீயே விலத்திடுவாய்..

தென்னிலங்கை மீன்களும்
வடவிலங்கை சுறாக்களும் நாடெங்கும்
யாழ் மீட்டி இசைபாட யாழ்தேவியாய்
ஊர்ந்து வருவாயோ ..தேவதையாய்
பூமிதேரில் ஏறி என் கண்முன்னால்
நகர்ந்துடுவாய்..காவியமும் எழுதலாமடி
உன் இறந்த கதையை கேட்டு ...
இறக்கவில்லை நீ கூட எம்
மனதில் நிலைதிருந்தாய் மறையாமலே..

வசைபாடும் மானிடனும்
வாஞ்சையில்லா மாமனிதனும்
வாய்திறந்து இசைமீட்க யாழ்மண்ணதில்
புரள்வாயோ ...உலகெமெல்லாம்
தமிழினத்தின் உண்மையதை
சொல்வாயோ..நடத்துகின்ற
புரட்சிகளால் இனியும் நீ மடிவாயோ.!

தெருக்களையும் கடந்து சென்றாய் ..
எம் பாத செருப்பதனை ஏற்றி செல்வாய்..
ஈழவரின் சேவகனாய் தலைநிமிர்ந்து
வாவேனின்று ..
காணவில்லை நேரெதிரே
மறைந்திருந்தாய் ஒரு புதிராய்
மாயவனும் விலகி சென்றான்
மறைவாக இருக்கலாமோ..

மந்திரமும் எம்மவர்க்கில்லை
உன் உடல் எந்திரமும் எம் சொந்தமில்லை ..
வேதனையை தந்தவள் நீ துயில்
சோம்பலாயே இருக்கிறாயே..

இடைவிடாமல் துடிக்கும் தன்
இருதயமும் ஒலியெழுப்பும் உன்
ஒலியதனை எதிர்பார்த்தே..
நாம் காணாமல் கருத்து
சொல்வதை புதுக்காவியமாய் படைப்பாயோ..


This entry was posted on 9:45 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    மதுரை சரவணன் said...

    கவிதை அருமை. வாழ்த்துக்கள்

  1. ... on April 25, 2010 at 9:11 AM  
  2. ராஜ்பிரதாப் said...

    உங்கள் கருத்துக்கு நன்றி

  3. ... on April 25, 2010 at 8:05 PM