ரகசியமாய் ஒன்று கண்டோம்
நாமங்கு முக புத்தகத்தினில் அவள்
உள் முகமறியாமலே...
பார்த்ததுமில்லை கதைத்ததுமில்லை
பயம் தான் சற்றே அன்று
எம்முடனும் அவளுக்கன்று..

ஓரிரு வார்த்தைகளாம்
வருடாத பேச்சுகளாம்
புரிந்தது அவளுள்ளம் அன்றே
நன்கு...

இறைவனுக்கும் பரிசுதான்
அதுபோன்ற நண்பியார் எம்முடனே
ஒருத்தியன்றோ..

அடக்கமும் பணிவுமாம் அவள் கரங்கள்
அடக்கவந்தாள் அடங்கா ஜீவன்களை
வீரமது வனிதையாக..
கனாகூட அன்று காணவில்லை -
நாமும் கண்டோம் இன்று கனா காணும்
காலங்களில் அவள் ராகவியின் பிரதியன்றோ..

நட்பென்றால் ரசிகையாம்
அவளோ நட்புக்கோர் இலக்கணமும்
எழுதியே உள்ளாள் ..
அறிவுரைகளாம் பலதந்து
ரகசியமாய் ரசித்த அவளும்
ஒரு ரசிகையன்றோ..

பேச்சிலும் குழந்தைத்தனமாம்
அவள் இன்னும் குழந்தைதான் என்பதை
நண்பர் நாமறிவோம்...
யார் சொல்வார் இதையெல்லாம்
நாமறிவோம் நன்கே சொல்வோம்
இக்கவியாலே..

சேயுள்ளம் தான் இவளுக்கும்
தன்  தாயதன் பாச முடிச்சை
அவிழ்க்காமலே இருப்பாள் என்றென்றும்..

பிறருதவி தான் செய்வாள்
தன் கருமம் போலெண்ணி
தன்னினிய நட்புகனிக்க..

சொந்தமென்றால் சோகமாம்
இவள் வாழ்வில் சொல்லிவைத்த
வடுக்களாம் இவள் மனதில்...
கவலையில்லையாம் இனியங்கு
நண்பர்களால் மறந்தாளோ புரியவில்லை
இன்னும் எமக்கு ..

சிறு பிரிவொன்று வந்ததாம்
அவளுடனே அன்று பிரியவில்லை
நாம் கூட எம் பிரியா நண்பி அவளன்றோ..
எம் மனதில் சத்தியம் தான்
இங்கு கூட சாத்தியத்துக்கே இடமில்லையாம்...

பாசத்துடன் கதை பேசும்
பண்புடனே புன்சிரிக்கும் அவள்
முகமதுவும் நிலவதன் முகமன்றோ..

சொல்வதும் நாம் தான் ஏற்கமாட்டாள்
இதை என்றும் தன் அடக்கத்தினாலோ
நாமறியோம் ..

கல்விதான் அவள் இலக்காம்
அவள் கூட எம் போன்ற ஜீவனன்றோ...
எம் கொள்கை தான் அங்கு கூட சிறகடிக்கும்
விட்டிலாய் உலாவுது அவள் மனதினிலே..

எம் குழப்பம் தீர்க்கவந்தாள் எம்செல்ல
குறும்புகளையும் போக்க வந்தாள்..
உணவதையும் தன் தொல்லை என்பாள்
அவள் உண்ணுவதும் இனிமை தானோ..

நண்பரவர் நாமொழி கேட்பாள்
நட்பினிலே  நாடகம் அங்குமில்லையாம் ....
குறும்பு மனமது தானங்கே அவளுமங்கு
எம்மவர்களில் ஒருத்தியன்றோ..

தாயவளை தெய்வம் என்பாள்
அவள் தாய் கூட எப்பிறப்பிலும்
தெய்வம் அன்றோ...
நல்லண்ணன் உள்ளானாம்
நாலதுவும் அறிவானாம்
இவளுமத்தை புரியாளாம் சேய்தானே
இவளென்றும்..    


பிரச்சினைகள் தான் அவள் சூழலில்
பிரயோஜனமில்லையாம்
அது தெரியும் எமக்கு என்றும் ..
தெரிந்ததும் அவளுக்கும் கணக்கில்லைதான்
போகட்டும் என அவள் உள்மனம் வெறுத்து ..

உலகதன் முடிவரையும் உலவும்
ஜீவன்களில் ஒரு ஜீவனன்றோ இவள் கூட..
உலவிடுமாம் எம்முடனே எம்
நண்பியாக என்றும் பாசத்துடனே..
கவலைதான் அன்று எமக்கு சகோதரி
தானில்லை எம்முடனேஎன்று..
தீர்த்ததில் இவள் கூட எம் வாழ்வில்
மறையா ஒளியாக உதித்தாளோ ...


This entry was posted on 9:13 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: