நட்பெனும் கடலில் இணைந்தோம்
அன்று அலையாகி சென்றது அதுவும் இன்று....
கண்ணீரும் கலந்தது உண்மைதான்
அவ்வலையோடு சென்றதும் பொய்யாகுமோ!!

நட்புக்கோர் இலக்கணம் தேட
சென்றோம் நாமே -விடைகூட
கிடைத்தது விரக்தியில் இன்று..
கல்லூரி காலமதில் கண்டதோர் பிரிவு
இணைய வழியதனில் இன்னுமோர்
இணையா பிரிவு..

நினைக்கவில்லை ஒருபோதும் நடக்குமென்று
நடந்ததும் பிறர் நினைதாட் போலவே நன்று...

என் விழிகள் அழுவதும் கண்ணீரால்
தான் அன்றி உதிரமும் கூட வழியுது என்
முகத்தினிலே ...
நீர் அறிவீர்-மனமதும் சொரிகிறது
தன் கண்நீரதனை என்றும் வற்றா
என் மன அருவிக்கு தானோ ...

பிரிவதன் வலியும் தாயதன் சேய்ப்பிரிவும்
இணையென நினைத்தும் என் மனம்தான் இன்று...
உணர்கிறேன் அதை நன்கே என் மனமும்
சேய் தானோ புரியவில்லை எனக்கு...

என் பிரிந்தோர் பலர் உளர் என்மனமதை
புரிந்தோரும் சிலர் உளர்..
புரியாதோர் கூட புரிவீர் இதன் கொடுமையை
தம் மனதில் வெளிச்சமாகவே...

மனமெனும் பூவில் மணமது இல்லையாம் -இது
தோன்றியதும் இன்று தானோ என் மனதில் ..
மலரின் மணமது உணராத தனி மரமாகி நிற்பேனோ!
என் தைரியமோ வினவுகிறது இன்றென்னை..

நட்பதன் பிரிவை தாங்காத
என்னுள்ளம் நட்பதன் பெருமை
உணருமோ இனிக்காலத்தினில்...

கடலதில் கரைக்கின்றேன் நட்பெனும்
அஸ்தியை என் மனக்கண்ணீருடன்
சேர்த்தே இன்று ...

உடன் பிறந்தார் போல் பழகி
நாமெல்லாம் உலகத்தை
உணருவோம் இனிமேலே..
ஒரு தாய் பிள்ளை தான் நாமெல்லாம்
இப்புவியதன் கால சக்கரத்தினில் அன்றோ...


This entry was posted on 11:05 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: