மணிக்கணக்கில் ஜோசித்து  தூதாணை அனுப்பியும் ,எம் தமிழனை கணப்பொழுதில் கைவிட்டார் அவர் கணக்கில்லை போகட்டும்..

விரும்பாத வாழ்வதுக்கு வெறுப்புதான் விடையன்று,  ஆனா வெறுக்காத  எம் புது வாழ்வில் விருப்புத்தான் துணையின்று..


இனத்தார்க்கு உள்ளேயே எம் இனம் பற்றி ஓர்  பாடமாம்,
                           ஆனா இனம் பிரிப்பு தான் நடக்கும் சில தமிழ்  மனத்தின் தாகமாம்.

சிங்களவன் கூட சின்னதாயே பிரிப்பானாம் ,
                           ஆனா தமிழன்தான் தமிழனையே ஆயுள் வரையும் பெரிசா  வெறுப்பானம்..

தமிழனவன் தன்மையினால் தரித்திரம் தான் கூடலோ,
                            ஆனா சரித்திரத்தில் தடம் பதிக்க ஏன் தான் இன்னும் அவன் மனம்  ஆடலோ..

சுயனலத்தார் கூடுதலாய் நலக் குணம் கொள்ளார் தெரியுமோ,
                             அவரும் குணம் கொள்ளும் சிலர் மீதும் மனம் வெறுத்தல் நமக்கு ஆகுமோ.

நாள்தோறும் நாட்காட்டி நற்பயனை காட்டினாலும்,
                               நமக்கேந்தான் இப்படியோ   நரகத்தில் இவ் வாழ்வோ .

தத்துவமும் கதைபாங்க சிலர் தனித்துவமும் கதைபாங்க ,  
                               ஆனா அக்கதையிலையே சில சொல்லில் பிறர் கழுத்ததையும்அறுப்பாங்க  .

வாழ்க்கையதில் ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரியுது,
                                மெய்யற்ற பிரச்சனையே இன்று நிறுத்தாமல் புகையுது.

பொம்பிளைங்க எண்டாத்தான்  சிலர்  வாய் இன்றும்  கதைக்குது,
                               ஆனா வாதாட போனோனே ஆம்பிளைக்கு  வாய்க்கரிசி வேகுது..

பொம்பிளைக்கு மட்டும்தான் சிலர்துணை நீதி போகுது,
                            ஆனா பொண்ணாலே தானுங்க இன்னும் பலர்  சாவும் ஆகுது..

நச்சன்னு இங்கு சொன்னதான் பிறர்  நாறல் கிளம்புது,
                              இங்கும் நடிக்காத என் தமிழில் புதுநயம் இன்னும் கூடுது.

வாய்ப்பேச்சால் பகைச்சவங்க வழி மாறித்தான்  போச்சுதோ ? இனியும் எம் கால் தூசி கிடைக்காது எம் வழிச்சான்று  வாழ்வுக்கு ..

வாயால கெட்டவங்க, வதைச்சுதான் பட்டவங்க ,அவை புது வகையாய் நடிப்புகள் இன்றும்  எம் மனம் காட்டி  நிக்குது..

வான் போன்ற எம் மனதை வதைச்சுதான் தொட்டவங்க அவ்  வழியெங்கும் முள்  குவியல் அவர்க்கு  சேர்ந்துதான் குத்துது..உலகத்தில நூறு தமிழன் உண்மையாயே பிறந்தாலும் உணர்வாலே  வாழ்பவங்க , பாவம்  நிலையழிஞ்சு போறாங்க.

கலக்கத்தில் சில தமிழர் கண்ணியமாய் இருந்தாலும் மன துலக்கதில் வாறவங்க மேலும் தூரமாயே போறாங்க.

தனித்துவத்தில் எம் தமிழர் தவறுதலாய் பிரிந்தாலும் அனைத்துலக அளவினிலே மேலும் அலைக்களிஞ்சு போவாங்க.

நிலைத்திருக்கும் இவ்வுலகில் நிம்மதியாய் இருப்பதுக்கு பிறரை  நீ கூட பிரிக்காதே அப் பிரிவொன்றால் எதையும் வெல்லாதே.


This entry was posted on 7:44 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: